கொரோனா தொற்றுக்கு பலியான இயக்குநர் தாமிராவின் கடைசி பதிவு

இயக்குநர் தாமிரா

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த இயக்குநர் தாமிராவின் கடைசி ஃபேஸ்புக் பதிவு ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

  • Share this:
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றின் காரணமாக இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 55. இவர், இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்னர் அவரையும், பாரதிராஜாவையும் இணைத்து ‘ரெட்டைச்சுழி’ என்கிற படத்தை இயக்கினார். அதன்பிறகு நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனியோடு சினிமாவில் இணைந்து பணியாற்றியவர் என்பதால் அவரை வைத்து இரண்டாவது படமாக ‘ஆண் தேவதை’ என்ற படத்தை இயக்கினார்.

மூன்றாவது படத்தை ஜெமினி நிறுவனத்துக்காக இயக்க கதை தயாரிப்பில் இருந்தபோது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். 20 நாட்களுக்கு முன்பு சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் தாமிரா இன்று காலை மூச்சுத்திணறல் அதிகமாகி உயிரிழந்தார். இவருக்கு 3 மகன்கள், 1 மகள் உள்ளனர். அவரது மரணம் திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.திரைபிரபலங்கள் பலரும் இயக்குநர் தாமிராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவர் கடைசியாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கும் பதிவு கவனம் பெற்று வருகிறது. அந்த பதிவில் கூறியிருப்பதாவது, “இந்த உலகை வெல்ல அன்பைத் தவிர வேறு சூட்சுமம் இல்லை. என்னுள் இருக்கும் தீராக் கோபங்களை இன்றோடு விட்டொழிக்கிறேன். இனி யாரோடும் பகைமுரண் இல்லை. யாவரும் கேளிர்” என்று கூறப்பட்டுள்ளது.
Published by:Sheik Hanifah
First published: