முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / டாணாக்காரன் யாரிடம் போய் சேர வேண்டுமோ அவர்களுடன் போய் சேர்ந்து விட்டது - இயக்குநர் தமிழ்

டாணாக்காரன் யாரிடம் போய் சேர வேண்டுமோ அவர்களுடன் போய் சேர்ந்து விட்டது - இயக்குநர் தமிழ்

டாணாக்காரன்

டாணாக்காரன்

Taanakkaran : விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ படம், தமிழ்நாட்டில் தற்போது இயங்கி கொண்டு இருக்கும் 43 காவலர் பயிற்சி பள்ளியிலும் திரையிடப்பட்டது. அசோக்நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி திரையிடலில் இயக்குனர் தமிழ் கலந்துகொண்டார்.

  • Last Updated :

இயக்குநர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த படம், ‘டாணாக்காரன்’. டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. காவலர் பயிற்சி பள்ளியில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டது.

இந்நிலையில், ‘டாணாக்காரன்’ படம் தமிழகத்தில் உள்ள 43 காவலர் பயிற்சி பள்ளியிலும் திரையிடப்பட்டுள்ளது. அங்குப் பயிற்சி பெற்று வரும் காவலர்களுக்கு படத்தை கண்டுகளித்துள்ளனர்.

‘டாணாக்காரன்’ திரையிடலைப் பார்த்துவிட்டு காவலர்கள் பலரும் இயக்குநர் தமிழுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். அத்துடன், தற்போது புகார் பெட்டி, கழிவறை வசதிகள் என எந்த அளவுக்குக் காவலர் பயிற்சி பள்ளி மாறியிருக்கிறது என்பதையும் எடுத்துரைத்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை அசோக்நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் ‘டாணாக்காரன்’ திரையிடலுக்கு இயக்குனர் அழைக்கப்பட்டார். அது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில், “டாணாக்காரன் திரைப்படம் தமிழ்நாட்டில் தற்போது இயங்கி கொண்டு இருக்கும் 43 காவலர் பயிற்சி பள்ளியிலும் திரையிடப்பட்டது அசோக்நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி திரையிடலுக்கு என்னை அழைத்து இருந்தார்கள்.

படம் பார்த்து விட்டு காவலர் பயிற்சியில் உள்ள காவலர்களுடன் உரையாடும் வாய்ப்பை நிர்வாகம் எனக்கு அளித்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. படத்தை திரையிட ஆணை பிறப்பித்த காவலர் பயிற்சி துறை தலைவர் திரு அருண் I.P.S அவர்களுக்கும், அசோக்நகர் காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் திரு மணிவண்ணன் IPS அவர்களுக்கும் நன்றி.

இறுதியாக அங்கிருந்து கிளம்பும் போது, அங்கு இருந்த முதன்மை அதிகாரியிடம் டாணாக்காரன் திரைப்படத்தை ஏன் திரையிடல் செய்கிறீர்கள் என்று நான் கேட்ட போது “எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் மக்களுக்காக உழைக்க நினைக்கும் காவலர்கள் இந்த சிஸ்டத்திற்க்குள் வர வேண்டும் என நீங்க சொன்ன செய்தி இந்த பசங்களுக்கு போய் சேர வேண்டும் காவல் துறை தலைவர் சொன்னார் அதான் இந்த திரையிடல் " என அவர் சொன்ன போது கொஞ்சம் அதிர்ச்சியாகி தான் நின்றேன்.

டாணாக்காரன் திரையிடல்

Must Read : காத்து வாக்குல கொட்டிக் கிடக்கும் அழகு - நயன்தாரா அழகின் ரகசியங்கள்!

டாணாக்காரன் திரைப்படதிற்கு காவல்துறையில் இருந்து வந்த பாராட்டையும் திரையிடலையும் மிகவும் உயர்வாகவும் அன்புடன் ஏற்கிறேன். டாணாக்காரன் யாரிடம் போய் சேர வேண்டுமோ அவர்களுடன்போய் சேர்ந்து விட்டதாகவே உணர்கிறேன். நன்றி” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Police, Vikram Prabhu