ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இயக்குனர் சுசி கணேசனின் புதிய படம் வஞ்சம் தீர்த்தாயடா!

இயக்குனர் சுசி கணேசனின் புதிய படம் வஞ்சம் தீர்த்தாயடா!

வஞ்சம் தீர்த்தாயடா

வஞ்சம் தீர்த்தாயடா

அரை டஜன் படங்கள் இயக்கியிருந்தாலும் மதுரைப் பின்னணியில் சுசி கணேசன் இயக்கும் முதல் ஆக்ஷன் படம் இது என்பது முக்கியமானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இயக்குனர் சுசி கணேசன் தமிழில் தனது அடுத்தப் படத்தை அறிவித்துள்ளார். படத்துக்கு 'வஞ்சம் தீர்த்தாயடா' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மணிரத்னத்தின் உதவி இயக்குனரான சுசி கணேசன், மணிரத்னம் தயாரித்த பைவ் ஸ்டார் படத்தின் மூலம் 2002-ல் இயக்குனரானார். விரும்புகிறேன், கந்தசாமி, திருட்டுப் பயலே, திருட்டுப் பயலே 2 என பல படங்கள் இயக்கினார். இந்தியில் திருட்டுப் பயலே படத்தை ரீமேக் செய்தார். தற்போது தில் ஹே க்ரே என்ற இந்திப் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இதையடுத்து அவர் மீண்டும் தமிழில் படம் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு வஞ்சம் தீர்த்தாயடா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 1980-களில் மதுரையில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் தயாராகிறது. மதுரை கதைக்களமும், வஞ்சம் தீர்த்தாயமா என்ற பெயரும் இது எப்படிப்பட்ட படம் என்பதை சொல்லிவிடும். பழிவாங்கும் ரத்தம் தெறிக்கும் கதையாம் இது. ரசிகர்களுக்கு புதுவித அனுபவம் உத்தரவாதம் என்கிறார் சுசி கணேசன். அரை டஜன் படங்கள் இயக்கியிருந்தாலும் மதுரைப் பின்னணியில் சுசி கணேசன் இயக்கும் முதல் ஆக்ஷன் படம் இது என்பது முக்கியமானது.

Director Susi Ganesan new film Vanjam Theerthayada, susi ganesan sneha, susi ganesan next movie, susi ganesan metoo, manjari susi ganesan, thiruttu payale, thiruttu payale 2, susi ganesan next film, susi ganesan next movie, susi ganesan tamil movies, சுசி கணேசன், இயக்குநர் சுசி கணேசன், சுசி கணேசன் அடுத்தப்படம், வஞ்சம் தீர்த்தாயடா

படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்களை வரும் பொங்கலுக்கு வெளியிட உள்ளார். சுசி கணேசனின் 4 வி என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Tamil Cinema