சுசி கணேசன் இயக்கும் வஞ்சம் தீர்த்தாயடா படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். சுசி கணேசனின் படத்திற்கு இளையராஜா இசையமைப்பது இதுவே முதல்முறை.
5 ஸ்டார் படத்தின் மூலம் இயக்குனரான சுசி கணேசன் இதுவரை 7 படங்கள் இயக்கியுள்ளார். அதில் இரண்டு இந்திப் படங்கள். ஏழாவது படம் (இந்தி) இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் மீண்டும் தமிழில் படம் இயக்குகிறார். வஞ்சம் தீர்த்தாயடா என படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்தப் படம் குறித்து சில தினங்கள் முன்பு அறிவித்த சுசி கணேசன். படத்துக்கு இளையராஜா இசையமைப்பதாக நேற்று அறிவித்தார்.
read also ..தனுஷின் ஹாலிவுட் படத்தின் வெளியீட்டு விவரம்!
சுசி கணேசன் தேவா, பரத்வாஜ், வித்யாசாகர், தேவி ஸ்ரீ பிரசாத், ஹிமேஷ் ரேஷ்மியா என பல இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்திருக்கிறார். ஆனால் இளையராஜா இசையில் படம் செய்ததில்லை. முதல்முறையாக இளையராஜா இசையில் வஞ்சம் தீர்த்தாயடா உருவாக இருக்கிறது.
read also.. மாணவர் கெட்டப்பில் தனுஷ் - கவனம் பெறும் ‘வாத்தி’ போஸ்டர்!
மதுரைப் பின்னணியில் இந்தப் படத்தை
சுசி கணேசன் எடுக்கிறார். 1980ல் மதுரையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் எடுக்கப்படுவதாக தெரிகிறது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் குறித்து விரைவில் சுசி கணேசன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.
இதையடுத்து
சுசி கணேசன் வேலு நாச்சியாரின் வாழ்க்கையை படமாக்கயிருப்பதாகவும், வேலு நாச்சியாராக நயன்தாராவை நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.