ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மீண்டும் பாரதிராஜாவை இயக்கும் சுசீந்திரன்?

மீண்டும் பாரதிராஜாவை இயக்கும் சுசீந்திரன்?

பாரதிராஜா

பாரதிராஜா

பாண்டிய நாடு படத்தில் பாரதிராஜாவை நடிக்க வைத்து, நடிகராக அவரை புரமோட் செய்ததில் சுசீந்திரனுக்கு முக்கிய பங்கு உண்டு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழ் சினிமாவின் நான் ஸ்டாப் இயக்குனர்கள் என சிலர் உண்டு. நாம் இயக்குகிற படம் ஓடுகிறதா, யாராவது பார்க்கிறார்களா, படம் லாபம் சம்பாதிக்கிறதா என்ற கவலை இல்லாமல் தொடர்ச்சியாக படங்கள் இயக்குகிறவர்கள். ஏ.எல்.விஜய்யை அடுத்து இந்தப் பெருமைக்குரியவர் சுசீந்திரன்.

வெண்ணிலா கபடிக்குழு, அழகர்சாமியின் குதிரை, நான் மகான் அல்ல என இவரது ஆரம்பம் சிறப்பாகவே இருந்தது. நடுவில் வந்த பாண்டிய நாடு தவிர்த்து மற்ற அனைத்துப் படங்களுமே சுமார் தான். சென்ற வருடம் இவரது இயக்கத்தில் வெளிவந்த சிம்புவின் ஈஸ்வரன் படமும் அப்படியே. அவரது இயக்கத்தில் ஜெய், ஆதி நடிப்பில் தலா ஒரு படம் தயாராகி வெளியீட்டுக்கு காத்திருக்கிறது.

இந்நிலையில் தனது அடுத்தப் படத்துக்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார் சுசீந்திரன். இந்தப் படத்தில் பாரதிராஜா, ராஜ்கிரண், அருள்நிதி, ஜெய் என நான்கு பிரபலமான நட்சத்திரங்கள் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நான்கு கதாபாத்திரங்களைச் சுற்றி நடப்பதாக கதை எழுதப்பட்டுள்ளது.

பாண்டிய நாடு படத்தில் பாரதிராஜாவை நடிக்க வைத்து, நடிகராக அவரை புரமோட் செய்ததில் சுசீந்திரனுக்கு முக்கிய பங்கு உண்டு. சுசீந்திரனின் கென்னடி கிளப் படத்திலும் பாரதிராஜா நடித்திருந்தார். இப்போது சுசீந்திரனின் புதிய படத்திலும் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. அவரது புதிய படத்திலும் அவர் இருக்கிறார் என்கிறார்கள்.

ராஜா சாருக்கு இது தெரியாதா? இளையராஜாவை விமர்சிக்கும் சின்மயி

படத்தின் தயாரிப்பு நிறுவனம், நட்சத்திரங்கள் பட்டியல், தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் என அனைத்தையும் விரைவில்  அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Director bharathiraja, Director suseenthiran