தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் டி. இமானுடன் 7 வது படத்தில் பணி புரியப் போவதாக பிரபல இயக்குனர் சுசீந்திரன் அறிவித்துள்ளார்.
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சுசீநதிரன் தொடர்ந்து நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்திருந்தார். கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளிவந்தது. இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில், தற்போது ஏஞ்செலினா, சிவசிவா ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.
இதையும் படிங்க :
சிவகார்த்திகேயனின் அயலான் எப்படியிருக்கும்? - எடிட்டர் வெளியிட்ட தகவல்
இந்நிலையில் நேற்று இசையமைப்பாளர் டி இமானின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருடன் 7 வது படததில் இணையப் போவதாக சுசீந்திரன் அறிவித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கிறார். மே 1ம் தேதி முதல் இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கிறது.
அதிக பொருட்செலவில் உருவாகவுள்ள இந்த படத்தில், தமிழின் முன்னணி நடிகர் ஒருவர் நடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் ப்ரீ புரொடக்சன் பணியில் சுசீந்திரன் ஈடுபட்டுள்ளார். இதற்கு டி இமான் இசையமைப்பார் என்று சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :
ஆல்ரவுண்டராக கலக்கும் இசை ரசிகர்களின் விஸ்வாச இசையமைப்பாளர் டி.இமான்...
முன்னதாக இருவரும் பாண்டிய நாடு, ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், கென்னடி கிளப் ஆகிய படங்களில் ஒன்றாக பணிபுரிந்தனர். தொடக்கத்தில் சிறிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த டி இமான் தற்போது விஸ்வாசம், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் என பெரிய பட்ஜெட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். பாடல்கள் தொடர்ந்து ஹிட்டாகி வருவதால், இமானுக்கு பெரிய பட்ஜெட் படங்களில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் குவிந்துள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.