முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிம்புவின் சினேக் சர்ச்சை குறித்து சுசீந்திரன் விளக்கம்

சிம்புவின் சினேக் சர்ச்சை குறித்து சுசீந்திரன் விளக்கம்

ஈஸ்வரன் படத்தில் சிம்பு

ஈஸ்வரன் படத்தில் சிம்பு

நடிகர் சிம்பு தனது தோளில் பாம்புடன் தோன்றியிருந்தார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

‘ஈஸ்வரன்’ படத்தில் பாம்பு கொடுமைப்படுத்தப்பட்டதா எழுந்த சர்ச்சைக்கு அந்தப் படத்தின் இயக்குநர் சுசீந்திரன் விளக்கமளித்துள்ளார்.

சிம்புவின் 46-வது திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்துக்காக தனது உடல் எடையைக் குறைத்திருக்கிறார் சிம்பு. அவருடன் பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தை படமாக்கி வரும் படக்குழு ஒரே கட்டமாக ஷூட்டிங்கை முடிக்கவும் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் நடிகர் சிம்பு தனது தோளில் பாம்புடன் தோன்றியிருந்தார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் ‘ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையாகின. அதில், உண்மையாகவே உயிருடன் உள்ள பாம்பை மரத்தில் இருந்து பிடித்து சாக்குப்பையில் சிலம்பரசன் போடுவது போல காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் பாம்புகள் அனைத்தும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாகும். சிம்பு பிடித்த பாம்பு வன உயிரின பாதுக்காப்பு சட்டத்தின் பட்டியல் 2ல் பிரிவு 2ல் இடம்பெற்றுள்ளது. இச்சட்ட்த்தின் கீழ் பாதுகாப்பட்ட உயிரினத்தை வைத்து படம் பிடிப்பது குற்றமாகும்.

பொதுவாக பாம்புகளை சினிமாவில் பயன்படுத்தும்போது அதன் பல் பிடுங்கப்பட்டிருக்கும் அல்லது வாய் ஒட்டப்பட்டிருக்கும். இப்படி வனவிலங்குகளை துன்புறுத்துவது குற்றம் என்பதால் சிம்பு  வன உயிரின பாதுகாப்பு  சட்டத்தை மீறியிருப்பதால் அவர் மீது உரிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய விலங்கு நல ஆர்வலர்கள் வேளச்சேரியிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து படக்குழுவை அழைத்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் ‘ஈஸவரன்’ படத்தின் இயக்குநர் சுசீந்திரன், “உண்மையில் அந்தக் காட்சி போலியான பிளாஸ்டிக் பாம்பு ஒன்றை வைத்து படமாக்கினோம். அது படத்தில் நிஜ பாம்பு போன்று கிராஃபிக்ஸ் செய்யப்படவுள்ளது. இந்தக் காட்சியைப் பற்றிய செய்தியையும், புகைப்படத்தையும் தயாரிப்பு நிறுவனம் சார்பாகவோ மற்றவர்கள் மூலமாகவோ அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. கணினி கிராஃபிக்ஸ் செய்யும் போது இந்த வீடியோ சில நபர்களால் கசிந்துள்ளது. எங்கள் தரப்பிலிருந்து காட்சிகள் எவ்வாறு கசிந்தன என்பதை நாங்கள் அதைப்பற்றி விசாரித்து வருகின்றோம்.

இது சம்பந்தமாக சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகார் தொடர்பாக வனத்துறை அதிகாரி கிளமண்ட் எடிசன் எங்களை விசாரணைக்கு அழைத்தார். நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து எங்கள் தரப்பு விளக்கத்தை தெளிவுபடுத்தினோம். அதற்கு உண்டான ஆதாரங்களை விரைவில் சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளோம். படத்தின் முழு படப்பிடிப்பும் தமிழக அரசின் வழிகாட்டுதலைக் கடைபிடித்து நடைபெற்று வருகிறது.” இவ்வாறு நடிகர் சுசீந்திரன் விளக்கமளித்துள்ளார்.

First published:

Tags: Eeswaran Movie, Simbu