ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''வதந்திகளை நம்பாதீங்க'' - விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்

''வதந்திகளை நம்பாதீங்க'' - விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜய் ஆண்டனி இயக்கி நடிக்கும் பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு மலேசியா நாட்டில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்றுவந்தது. அங்கு இப்படத்தின் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி காயமடைந்தார். இதனையடுத்து அவர் கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில் ஸ்கூட்டர் போட் ஓட்டும் காட்சியில் நடித்தபோது விபத்து ஏற்பட்டு தண்ணீரில் விஜய் ஆண்டனி மூழ்கியதாகவும், அவரை துணை ஒளிப்பதிவாளர் ஒருவர் காப்பாற்றியுள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் விஜய் ஆண்டனிக்கு நீச்சல் தெரியாத காரணத்தால் அவர் நீரில் முழ்கியதாகவும் கூறப்படுகிறது. முகத்தில் உள்ள காயங்களுக்காக மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்படவிருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. ஆனால் மருத்துவமனை அறிக்கைகள் போன்ற அதிகாரப்பூர்வமாக எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து இயக்குநர் சுசீந்திரன் அறிக்கை

இந்த நிலையில் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் காயமடைந்த விஜய் ஆண்டனி, 2 நாட்களுக்கு முன்பே, சென்னை வந்துவிட்டார். மருத்துவர்களின் அறிவுரையின்படி ஓய்வில் இருக்கிறார். கூடிய விரைவில் ரசிகர்களுடன் வீடியோ மூலம் பேசுவார். அவரின் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள வள்ளி மயில் படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அக்னி சிறகுகள் படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து விஜய் ஆண்டனி நடித்துள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பாக டி.சிவா தயாரிக்கும் இப்படத்தை மூடர் கூடம் நவீன் இயக்கியுள்ளார். மேலும் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் படவும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள தமிழரசன் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

First published:

Tags: Director suseenthiran, Vijay Antony