Home /News /entertainment /

புஷ்பா இயக்குனரின் அடுத்தப் பட ஹீரோ யார் தெரியுமா.?

புஷ்பா இயக்குனரின் அடுத்தப் பட ஹீரோ யார் தெரியுமா.?

RamCharan

RamCharan

Director Sukumar | புஷ்பா படத்திற்கு முன்னால் சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ரங்கஸ்தலம்'. ராம் சரண், சமந்தா நடித்த இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

சென்ற வருடத்தின் ஆல்டைம் ஹிட் திரைப்படம் என்றால் அது புஷ்பா தான். திரையிட்ட அனைத்து மொழிகளிலும் படம் பட்டையை கிளப்பியது. முக்கியமாக இந்தியில் புஷ்பா திரைப்படம் 97 கோடி ரூபாயை இதுவரை வசூலித்துள்ளது. இது வரிகள் போக கிடைத்த தொகையாகும். புஷ்பா படத்தின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்தவர் படத்தை இயக்கிய சுகுமார்.

ஒவ்வொரு பிரேமாக படத்தை இழைத்து உருவாக்குகிறவர் சுகுமார் என்பது அனைவரும் அறிந்த ரகசியம். புஷ்பா படத்திற்கு முன்னால் சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ரங்கஸ்தலம்'. ராம் சரண், சமந்தா நடித்த இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சமந்தா கிராமத்து பெண்ணாக வித்தியாசமான நடிப்பை வழங்கியிருந்தார்.

புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தை விரைவில் படமாக்க இருக்கும் சுகுமார் அதையடுத்து ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக ஐதராபாத்தில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. ராம் சரண் நடித்திருக்கும் ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி வெளியாவதாக இருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.

Also Read : இயக்குநருக்கு 1.15 கோடி மதிப்பிலான சொகுசு காரை பரிசளித்த தயாரிப்பாளர்

ராம் சரண் தனது தந்தை சிரஞ்சீவியுடன் நடித்திருக்கும் 'ஆச்சாரியா' திரைப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது அவர் ஷங்கர் இயக்கும் திரைப்படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவரது 15வது திரைப்படமாக தயாராகி வருகிறது. இதையடுத்து அவர் சுகுமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். படத்தில் உடன் நடிப்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.
Published by:Shalini C
First published:

Tags: Allu arjun, Ram Charan, Tollywood

அடுத்த செய்தி