ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிலம்பரசனுக்கு கதை சொன்ன சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கரா

சிலம்பரசனுக்கு கதை சொன்ன சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கரா

சிம்பு - சுதா கொங்கரா

சிம்பு - சுதா கொங்கரா

சுதா கொங்கரா தற்போது சூரரைப் போற்று படத்தை இந்தியில் இயக்குவதற்கான பணிகளில் இருக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சிலம்பரசன் அடுத்து சூரரைப் போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கலாம். அவர் சொன்ன கதை சிம்புவுக்கு பிடித்திருப்பதாக உள்வட்ட தகவல்கள் கூறுகின்றன.

தனது ஒத்துழையாமை குணத்தை ஒதுக்கி வைத்து 2021-ல் நல்லபிள்ளையாக மாறியிருக்கிறார் சிம்பு. இந்த வருடம் ஈஸ்வரன், மாநாடு என இரு படங்கள் அவரது நடிப்பில் வெளியாகின. இரண்டையும் குறித்த நேரத்தில் நடித்துக் கொடுத்து தன் மீதான இமேஜை மாற்றினார் சிம்பு. மாநாடு படத்தின் வெற்றி அவர் மீதான அனைத்து ஐயங்களையும் களைந்து புத்துணர்ச்சியூட்டியது.

தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து கௌதம் கார்த்திக்குடன் பத்து தல படம், அதையடுத்து கொரோனா குமார் படத்தில் கோகுல் இயக்கத்தில் நடிக்கிறார். இது அவரது 49 வது படமாக இருக்கும். இந்நிலையில் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று படங்களை இயக்கிய சுதா கொங்கரா, சிம்புவிடம் ஒரு கதை கூறியுள்ளார். கதை சிம்புக்கு பிடித்துள்ளது. கொரோனா குமாருக்குப் பிறகு சிம்புவின் 50-வது படத்தை சுதா கொங்கரா இயக்க அதிக வாய்ப்புள்ளது.

சுதா கொங்கரா தற்போது சூரரைப் போற்று படத்தை இந்தியில் இயக்குவதற்கான பணிகளில் இருக்கிறார். அத்துடன் இன்னொரு ஸ்கிரிப்டும் தயாராகிறது. சூது கவ்வும் இயக்குனர் நலன் குமாரசாமி இந்த ஸ்கிரிப்டை எழுதும் பணியில் உதவி செய்து வருகிறார். இதில் சூர்யா அல்லது அஜித் நடிக்கலாம் என கூறப்பட்ட நிலையில் தான் அவர் சிம்புவிடம் கதை கூறியுள்ளார். இந்தி சூரரைப் போற்று முடிந்த பிறகு சிம்பு நடிக்கும் படம் தொடங்கப்படலாம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Shalini C
First published:

Tags: Simbu, Tamil Cinema