தனுஷ் நடிப்பில் வாத்தி என்ற பெயரில் தமிழிலும் சார் என்ற பெயரில் தெலுங்கிலும் கடந்த வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியானது. தமிழில் கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில் தெலுங்கில் வாரிசு படத்துக்கு பாஸிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துவருவதாக கூறப்படுகிறது.
வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சமுத்திரக்கனி நடித்த சாட்டை படத்தின் சாயலில் வாத்தி படத்தின் கதை இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டர்னில் பிரம்மாண்டமாக வீடு ஒற்றை கட்டிவந்தார். புது வீட்டின் புதுமனை புகுவிழா சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் சுப்ரமணிய சிவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீட்டின் படங்களைப் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
அவரது பதிவில், தம்பி தனுஷின் புதிய வீடு கோவில் உணர்வு எனக்கு. வாழும் போதே தாய், தந்தையை சொர்கத்தில் வாழவைக்கும் பிள்ளைகள், தெய்வமாக உணர படுகிறார்கள். மேலும், தன் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும், எடுத்துக்காட்டாகவும், உதாரணமாகவும், உயர்ந்து விடுகிறார்கள்.
இன்னும் பல வெற்றிகளும் சாதனைகளும் உன்னை துரத்தட்டும், உன்னை பார்த்து ஏங்கட்டும் ,உன்னை கண்டு வியக்கட்டும், வாழ்க தம்பி, வாழ்வாங்கு வாழ்க என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Dhanush