ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தமிழ் சினிமாவில் புதுமை இயக்குனர் ஸ்ரீதர் அமைத்த ட்ரெண்ட் செட்..!

தமிழ் சினிமாவில் புதுமை இயக்குனர் ஸ்ரீதர் அமைத்த ட்ரெண்ட் செட்..!

இயக்குனர் ஸ்ரீதர்

இயக்குனர் ஸ்ரீதர்

காதல் மட்டுமா காமெடியிலும் தான் ஒரு புதுமை இயக்குனர் என நிரூபித்தார் இயக்குனர் ஸ்ரீதர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழ் திரையில் ட்ரெண்ட் செட் இயக்குனர்களின் முன்னோடி இயக்குனர் ஸ்ரீதர். இவரின் திரைப்பயணத்தை பற்றிய பதிவு. 

  ’ரத்தபாசம்’ திரைப் படத்தின் மூலம் கதை வசனகர்த்தாவாக திரை உலகப் பிரவேசம் செய்த ஸ்ரீதர், தான் முதலில் இயக்கிய ‘கல்யாணப் பரிசு’ திரைப்படத்திலேயே தமிழ் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார். ஜெமினிகணேசன், வி.சரோஜாதேவி, விஜயகுமாரி, கே.ஏ. தங்கவேலு, எம். சரோஜா போன்றவர்கள் நடித்த ‘கல்யாணப் பரிசு’ ஒரு முக்கோண காதல் கதையை கொண்டதாக அமைந்து அக்காலத்தில் பெரும் வெற்றி பெற்றது.

  தளபதி 66 படத்தின் மூலம் விஜய்யுடன் இணைந்த பிரகாஷ் ராஜ்!

  ஒரு காதல் கதையாக, காஷ்மீரின் இயற்கையழகு திரையில் மின்ன வெளிவந்த இவரின் ‘தேன் நிலவு’ மற்றும் மருத்துவமனையில் மட்டுமே காட்சிகளை வைத்து கதை சொன்ன ’நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்படங்கள் திரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆம்.. காதல், தியாகம், கடமை என்று உணர்ச்சிப்பூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் ஸ்ரீதர் படைத்த இந்த ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ காதல் காவியமானது.

  காதல் மட்டுமா காமடியிலும் தான் ஒரு புதுமை இயக்குனர் என நிரூபித்தார் இயக்குனர் ஸ்ரீதர். அத்திரைப்படம்தான் அவர் இயக்கத்தில் வெளிவந்த ‘காதலிக்க நேரமில்லை’. விஷ்வனாதன் வேலை வேண்டும்’ என்ற பாடலும்…. பாலையாவிடம் நாகேஷ் சொல்லும் திகில் கதையும் அன்னாளில் வைரல் ஹிட் ஆனது.

  ஸ்ரீதரின் மற்றொரு திரைப்படமான ‘வெண்ணிற ஆடை’ வரலாற்றில் தன் பெயரை பதித்தது. ஆம்... இத்திரைப்படத்தின் கதாநாயகிதான் தமிழ்த் திரை உலகிலும் அதற்குப் பிறகு அரசியலிலும் சரித்திரம் படைத்த ஜெயலலிதா.

  நெஞ்சம் மறப்பதில்லை’, ‘போலீஸ்காரன் மகள்’ சுமைதாங்கி……கலைக் கோவில்….சிவந்த மண்……உரிமைக் குரல் .. நெஞ்சிருக்கும் வரை’ என ரசிகர்கள் நெஞ்சம் மறக்கா படைப்புகளை கொடுத்த ஸ்ரீதரின் மற்றுமொரு மறக்கவியலா படைப்பானது ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்து நடித்த ’இளமை ஊஞ்சலாடுகிறது’.

  சர்வைவர் விஜியின் பஞ்சாயத்தில் கருத்து சொன்ன அனிதா சம்பத்!

  விக்ரமை வைத்து இவர் இயக்கிய ‘தந்துவிட்டேன் என்னை’,…. ரகுவரனின் ‘ஒரு ஓடை நதியாகிறது’, மோகனை இயக்கிய ‘தென்றலே என்னைத் தொடு’, கார்த்திக்குடன் ‘நினைவெல்லாம் நித்யா’ என தலைமுறைகளை தாண்டியும் புதுமைகள் செய்தார் இந்த புதுமை இயக்குனர் ஸ்ரீதர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Kollywood, Tamil Cinema