Home /News /entertainment /

அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கும் இளம் இயக்குநர்?

அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கும் இளம் இயக்குநர்?

அஜித்

அஜித்

அஜித்தின் 63வது படத்தைப் பற்றி முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இளம் இயக்குநர் ஸ்ரீகணேஷின் அடுத்தப் படத்தில் நடிகர் அஜித் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

    நடிகர் அஜித் குமார் அடுத்த வாரம் சென்னையில் 'ஏகே61' படப்பிடிப்பை மீண்டும் தொடங்க உள்ளதாகவும், புதிய ஷெட்யூலில் மஞ்சு வாரியர் இணைவார் என்றும் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். படத்தின் 30% படப்பிடிப்பு எஞ்சியுள்ளதால், ஏகே61 தயாரிப்பாளர்கள் டிசம்பர் அல்லது ஜனவரியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

    இதற்கடுத்து அனிருத் இசையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள 'AK62' படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார் அஜித். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை 2023 தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு குழு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே அஜித்தின் 63வது படத்தைப் பற்றி முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    விஜய் தலைமையில் நடந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் இரண்டாவது திருமணம்!

    தனது முதல் படமான '8 தோட்டாக்கள்' மூலம் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்ற இயக்குனர் ஸ்ரீ கணேஷ், AK63 படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இளம் இயக்குநரான இவர் சமீபத்தில் ரசிகர்களுடனான ட்விட்டர் உரையாடலில் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். ஸ்ரீ கணேஷின் சமீபத்திய படம் 'குருதி ஆட்டம்' ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இவர் இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Ajith

    அடுத்த செய்தி