SP Jananathan: சிகிச்சை பலனின்றி இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மரணம்

SP Jananathan: சிகிச்சை பலனின்றி இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மரணம்

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்

சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இத்தகவலை சற்று முன் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

  • Share this:
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மரணமடைந்துள்ளார்.

நடிகர்கள் ஷ்யாம், அருண்விஜய் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான படம் ’இயற்கை’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.பி.ஜனநாதன். முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். இதைத் தொடர்ந்து ’ஈ’, ’பேராண்மை’, ’புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ என பல்வேறு சமூக பிரச்னைகளை மையப்படுத்திய படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது அவர் ‘லாபம்’ என்ற படத்தின் பின் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தார். இதில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லாபம் படத்தின் எடிட்டிங் பணியில் இருந்த ஜனநாதன் கடந்த 11-ம் தேதி மதியம் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு சென்றிருந்தார். மணி 3.30 ஆகியும் அவர் திரும்பாததால், அவரது உதவியாளர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, கதவு திறந்திருக்க சுயநினைவின்றி ஜனநாதன் மயங்கி கிடந்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த உதவியாளர்கள், அவரை மீட்டு கிரீம்ஸ் ரோட்டிலுள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிசிச்சை அளிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது, அவருக்கு வயது 61. இத்தகவலை சற்று முன் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கம்யூனிச கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்ட ஜனநாதன், பொதுவுடைமை கொள்கைகளை மையப்படுத்தி எந்த வித சமரசமும் இன்றி தனது படங்களை இயக்கினார். அவரது மரணம் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: