’இயற்கை 2 எடுக்க திட்டமிட்டிருந்தோம்’ நடிகர் ஷாம்!

ஷாம்

படத்தின் பட்ஜெட் அதிகமானால் தன்னுடைய சம்பளத்தை அவராகவே குறைத்துக் கொள்வார்.

 • Share this:
  நடிகர் ஷாமுக்கு அடையாளம் தந்த படம் இயற்கை. நடிகை குட்டி ராதிகாவும் இயற்கையில் அறிமுகமானார். ஏன், அருண் விஜய்க்கும் இயற்கை பெயர் சொல்லும் படமாக அமைந்தது.

  எஸ்.பி.ஜனநாதனின் முதல் படமான இயற்கை தமிழ் சினிமாவில் நம்பிக்கையின் விதைகளை தூவிய படம். தாஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை எஸ்.பி.ஜனநாதன் எடுத்தார். பல்வேறு ஆளுமைகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இதில் பங்களிப்பு செலுத்தினர். படம் தேசிய விருதை வென்றது.

  இந்நிலையில் இயற்கை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருந்ததாக ஷாம் கூறியுள்ளார். நேற்று எஸ்.பி.ஜனநாதனின் பிறந்தநாள். அதனை முன்னிட்டு பேசிய ஷாம், ஜனநாதனின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

  "எனக்கு எதிர்மறை எண்ணம் ஏற்படும் போது அவரிடம் செல்வேன். பாஸிட்டிவாக பேசி ஊக்கம் தருவார். எல்லோருக்கும் ஒரு நாள் வரும், அதுவரை மன தைரியத்தை விட்டுவிடாதே என்பார். நல்ல மனிதர். பணத்தின் மீது ஆசை இல்லாதவர். படத்தின் பட்ஜெட் அதிகமானால் தன்னுடைய சம்பளத்தை அவராகவே குறைத்துக் கொள்வார். புறம்போக்கு படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதியுடன் அவரது இயக்கத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம்." என்றார் ஷாம்.

  எஸ்.பி.ஜனநாதன், லாபம் படத்தை இயக்கி வந்த நிலையில் அவரது மரணம் நிகழ்ந்தது. லாபம் படத்தின் அனைத்துக் காட்சிகளின் படப்பிடிப்பையும் அவர் முடித்திருந்தார். பேட்ச் வொர்க் மட்டுமே எஞ்சியுள்ளது. விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள இதிலும், அரசியல் கருத்துகளை ஆழமாக பேசியுள்ளார் ஜனநாதன். இந்த வருடம் லாபம் வெளியாக உள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: