Home /News /entertainment /

சிவா இயக்கும் சூர்யா 42 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்… ரசிகர்கள் மகிழ்ச்சி

சிவா இயக்கும் சூர்யா 42 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்… ரசிகர்கள் மகிழ்ச்சி

சூர்யா

சூர்யா

Suriya 42 : சமீபத்தில் நடைபெற்ற பெரும் விருமன் வெற்றி விழா கொண்டாட்டத்தில் வித்தியாசமான கெட்டப்பில் சூர்யா பங்கேற்றிருந்தார். இதுதான் சிவா படத்திற்கான கெட்டப் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சிவா இயக்கவுள்ள சூர்யாவின் 42-வது படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அறிந்த சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    சூர்யா நடிக்கும் படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளார். இது தொடர்பாக நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது சூர்யா நடிக்க உள்ள 42வது படத்தை சிவா இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சூர்யா தற்போது பாலா இயக்கும் வணங்கான், வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் ஆகிய படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். இதில் இவ்விரு படங்களின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சிவா இயக்கவுள்ள படத்தின் சூட்டிங்கில் சூர்யா பங்கேற்க இருக்கிறார்.

    வெளியானது நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ட்ரெய்லர்!

    சிவா இயக்கிய அண்ணாத்த, விஸ்வாசம் படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக சூர்யாவை வைத்து படம் இயக்குகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

    இந்நிலையில் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைப்பார் என தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேவி ஸ்ரீ பிரசாத் சமீபத்தில் புஷ்பா படத்திற்கு இசை அமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் மாபெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான வாரியர் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற புல்லட், விசில் உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்தன.

    இந்த நிலையில் சூர்யா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். சூர்யா - தேவி ஸ்ரீபிரசாத் காம்போவில் ஏற்கனவே மாயாவி, சிங்கம், சிங்கம் 2, ஆறு ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன.

    இந்த நான்கு படங்களின் பாடல்களும் மிகப் பெரும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில், சூர்யா படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இணைந்துள்ள தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    சமீபத்தில் நடைபெற்ற பெரும் விருமன் வெற்றி விழா கொண்டாட்டத்தில் வித்தியாசமான கெட்டப்பில் சூர்யா பங்கேற்றிருந்தார். இதுதான் சிவா படத்திற்கான கெட்டப் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Suriya

    அடுத்த செய்தி