முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 3 ஆண்டுகளுக்கு பின்பு வெளியான சூர்யா - சிறுத்தை சிவா படத்தின் முக்கிய அப்டேட்!

3 ஆண்டுகளுக்கு பின்பு வெளியான சூர்யா - சிறுத்தை சிவா படத்தின் முக்கிய அப்டேட்!

சிவா - சூர்யா

சிவா - சூர்யா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான பூஜை 21ஆம் தேதி நடைபெறுகிறது. 22ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கான பூஜை வரும் 21ஆம் தேதி நடைபெறுகிறது. 

நடிகர் சூர்யா - சிறுத்தை சிவா இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  இதற்கான முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்திற்கான அறிவிப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது.  ஆனால் சிறுத்தை சிவா நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் பிசியானார்.

jailer : ரஜினி படத்தில் இணையும் தமன்னா.. ஜெயிலர் படத்தின் மாஸ் அப்டேட்!

இதன் காரணமாக சூர்யாவின் படத்திற்கான வேலைகள் தொடங்காமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது படத்தை தொடங்கும் வேளையில் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.  இதையடுத்து தற்போது படப்பிடிப்புக்கு இருவரும் தயாராகி உள்ளனர். வரும் 21ஆம் தேதி சூர்யா சிறுத்தை சிவா இணையும் படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெறுகிறது.

Director Siva and Suriya to team up Latest updates

முன் ஜாமீன் கோரி கனல் கண்ணன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

அதைத் தொடர்ந்து 22ஆம் தேதி அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த திரைப்படம் வரலாற்று பின்னணியில் உருவாகிறது என கூறுகின்றனர். சூர்யா - சிறுத்தை சிவா இணையும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Surya, Director siva, Kollywood, Tamil Cinema