பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவுக்கு கொரோனா தொற்று..

தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டதாக பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவுக்கு கொரோனா தொற்று..
இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்
  • News18 Tamil
  • Last Updated: September 16, 2020, 4:16 PM IST
  • Share this:
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களை இயக்கியுள்ள சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இந்திய சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என திரைத்துறையில் பன்முக திறமைகளைக் கொண்டிருப்பவர் சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்.

தமிழில் கமல்ஹாசனை நாயகனாக வைத்து ‘அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது, “21-ம் தேதி எனது பிறந்தநாள் தொடர்பாக பேசுவதற்காக பலர் என்னைத் தொடர்பு கொண்டு வருகின்றனர். அவர்கள் அழைப்பை என்னால் ஏற்க முடியவில்லை. கடந்த செப்டம்பர் 9-ம் தேதி எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மிகவும் லேசான அறிகுறிகளே தென்பட்டன. தற்போது வீட்டுத் தனிமையில் இருக்கிறேன். எல்லாம் நலமாகவே இருக்கிறது. வரும் 22-ம் தேதி வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.


புத்தகங்கள் வாசிப்பு, திரைக்கதை வேலைகள் செய்து நேரத்தைக் கழிக்கிறேன். என்னைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் அனைவருக்கும் நன்றி.

கொரோனா தீவிரமான தொற்று. அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முகக்கவசம், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். நான் அனைத்தையும் பின்பற்றியும் எனக்கு கொரோனா தொற்று வந்திருக்கிறது. மனித இனம் எப்போதும் இதுபோன்ற நோய்த் தொற்றுகளிலிருந்து மீண்டு வந்திருக்கிறது” இவ்வாறு சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading