Home /News /entertainment /

மகளை தொடர்ந்து இயக்குனர் ஷங்கரின் மகனும் நடிகராகிறார்...!

மகளை தொடர்ந்து இயக்குனர் ஷங்கரின் மகனும் நடிகராகிறார்...!

அர்ஜித்

அர்ஜித்

சில வருடங்கள் முன் அர்ஜித், ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆகியோர் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது.

  • News18
  • Last Updated :
இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி விருமன் படத்தில் நடிகையாக அறிமுகமாகியுள்ள நிலையில், ஷங்கரின் மகனும் விரைவில் சினிமாவில் நடிக்கயிருக்கிறார்.

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு 2021 ஜுன் மாதம் திருமணம் முடிந்தது. அவரது இளைய மகள் அதிதி விருமன் படத்தில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். மகள் சினிமாவில் நடிப்பதில் ஷங்கருக்கு விருப்பமில்லை. அதிதி நடிப்பதில் உறுதியாக இருக்க இறுதியில் ஷங்கர் சம்மதித்தார். அதனைத் தொடர்ந்து விருமனில் அதிதி நடித்தார். ஷங்கரின் மகன் அர்ஜித்தும் விரைவில் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார்.

சில வருடங்கள் முன் அர்ஜித், ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆகியோர் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது.



இவர்கள் மூவரின் தந்தையர்களும் ஐ படத்தில் ஒன்றாக பணிபுரிந்திருக்கிறார்கள். ஐ படத்தை ஷங்கர் இயக்க, விக்ரம் நடிக்க, ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இவர்களின் வாரிசுகளும் சினிமாவில் நுழையயிருப்பதாக அப்போது பேசப்பட்டது. இதில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் நடிகரானார். ரஹ்மானின் மகன் அமீன் அப்பாவின் பல படங்களில் பாடியுள்ளார்.

Also read... மன்மத லீலை டைட்டிலுக்காக தொடரும் வார்த்தைப் போர்...!

ஷங்கரின் மகன் அர்ஜித் இயக்குனராக வேண்டும் என்று வெளிநாடு சென்று படித்தவர், திடீரென நடிகராக யுடர்ன் அடித்துள்ளார். இவரைப் போல் இயக்குனராக வேண்டும் என்று சினிமாவில் நுழைந்த விஷால், கார்த்தி, மோகன்லாலின் மகன் ப்ரணவ்  என பலரும் இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். அர்ஜித்தும் விரைவில் அவர்கள் வரிசையில் இணைய உள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி