ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

குடும்பத்துடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த இயக்குநர் ஷங்கர்!

குடும்பத்துடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த இயக்குநர் ஷங்கர்!

குடும்பத்துடன் ஷங்கர்

குடும்பத்துடன் ஷங்கர்

இந்தியன் 2 படப்பிடிப்புக்கு இடையே குடும்பத்துடன் திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் இயக்குநர் ஷங்கர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக திகழ்பவர் இயக்குநர் ஷங்கர். 90-களில் இயக்குநரான அவர் பான்-இந்தியன் வெற்றி படங்களை வழங்கியுள்ளார். தற்போது கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' மற்றும் ராம் சரண் நடிக்கும் 'RC15' ஆகிய படங்களை இயக்குவதில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில், அவர் தனது குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

ஷங்கர், அவரது மனைவி ஈஸ்வரி, மகன் அர்ஜித் மற்றும் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அங்கு அவரது குடும்பத்தினருக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பு உபசரிப்பு அளிக்கப்பட்டது. தரிசனம் முடிந்து வெளியே வந்த ஷங்கருடன் ரசிகர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜனவரி 22-ஆம் தேதி திருப்பதி வனப்பகுதியில் இந்தியன் 2 படத்தின் புதிய ஷெட்யூல் தொடங்கியது. இதற்காக புறநகரில் ஒரு பெரிய கிராமம் செட் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 2023-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியன் 2 படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மறுபுறம், பிப்ரவரி முதல் வாரத்தில் விசாகப்பட்டினத்தில் RC15 படத்தின் புதிய ஷெட்யூலை தொடங்க ஷங்கர் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Director Shankar, Tamil Cinema