Shankar: மறக்க முடியாத நிகழ்வாக மாற்றிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி - இயக்குநர் ஷங்கர் நெகிழ்ச்சி!

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இயக்குநர் ஷங்கர்

முதல்வர் தனது நேரத்தை ஒதுக்கி, தங்கள் மகள் திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்தியது, மறக்க முடியாத நிகழ்வு என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
    மகள் திருமணத்துக்கு வருகை புரிந்து வாழ்த்திய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் ஷங்கர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது. இளம் கிரிக்கெட் வீரரும், டி.என்.பி.எல்-லில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரின் மகனுமான ரோகித்தை, மருத்துவரான ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார்.

    கொரோனா தொற்றுநோய் காரணமாக மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டும் இதில் கலந்துக் கொண்டனர். குறிப்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஷங்கர் மகளின் திருமணத்திற்கு சென்று மணமக்களை வாழ்த்தினர்.



    இந்நிலையில் இயக்குனர் ஷங்கர், தனது மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். முதல்வர் தனது நேரத்தை ஒதுக்கி, தங்கள் மகள் திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்தியது, மறக்க முடியாத நிகழ்வு என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அதோடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: