தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தெலுங்கு பக்கம் கரை ஒதுங்க காரணம் என்ன ? என்பது குறித்த பதிவு.
தமிழ் சினிமாவில் பிரமாண்டம் என்ற சொல்லுக்கு பொருள் எழுதியவர் இயக்குனர் சங்கர். தமிழ் சினிமா அதுவரை பார்த்திராத காட்சிகளை கண்முன் நிறுத்தில் சங்கருக்கு மிக முக்கிய பங்கு உண்டு. சங்கர் இயக்குனராக களமிறங்கிய துவங்கியதிலிருந்து ஆச்சரியப்படுத்திய ஜெண்டில் மேன் கண்ணாடி பஸ், முதல்வனில் நம்பவே முடியாத கிராபிக்ஸ் பாம்பு, நண்பனில் கலர் அடித்த ரயில் வண்டி, சிவாஜியில் நாயகனின் முகம் பதித்த தொப்பை மனிதர்கள் என பிரம்மாண்ட விருந்து படைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமலஹாசன் ரஜினிகாந்த் என இரு பெரும் நடிகர்களின் முதல் தேர்வாக இருந்த சங்கர் ஜென்டில்மேன் காதலன் திரைப்படங்களை தொடர்ந்து 1995ஆம் ஆண்டு இயக்கிய இந்தியன் திரைப்படம் அன்றைய தேதியில் ரஜினிகாந்த் திரைப்படத்தை விட அதிக வசூல் ஈட்டி இந்திய அளவில் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படம் என்ற சாதனையை படைத்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர்பெற்ற சங்கர் அதிக பட்ஜெட்டில் ஆன திரைப்படங்களை மட்டுமே இயக்குவார் என்ற பெயர் பெற ஜீன்ஸ் முதல்வன் என சங்கர் இயக்கிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது. அடுத்து பாய்ஸ் திரைப்படத்தில் சங்கர் எடுத்த புதிய முயற்சிக்கு முதல் முறை தமிழ் சினிமாவில் குட்டு ஒன்று விழுந்தது வணிகரீதியில் கலவையான விமர்சனங்களை பெற்று தந்த இந்த திரைப்படம் விமர்சன ரீதியில் மோசமான திரைப்படமாக விமர்சிக்கப்பட்டது. இந்த திரைப்படத்திற்கு அன்றைய தேதியில் வார இதழ்கள் விமர்சனம் எழுதவே மறுத்த நிகழ்வுகளும் தமிழ் சினிமாவில் அரங்கேறியது.
இதையும் படிங்க.. பிக் பாஸ் தாமரை செல்விக்கு வீடு கட்டி தரப்போகும் பிரபலம்.. குவியும் பாராட்டுக்கள்!
இதன் பின்னர் ரஜினி கூட்டணியில் உருவான சிவாஜி திரைப்படம் ரஜினி காகவே எழுதப்பட்ட டைலர் மேட் கதையாக பார்க்கப்பட்டது. சிவாஜி திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி ஏவிஎம் நிறுவனத்திற்கு மாபெரும் வர்த்தகத்தை நிகழ்த்தி கொடுக்க இதன் பின்னர் மீண்டும் ரஜினியுடன் எந்திரன் திரைப்படத்தில் கைகொடுத்தார் சங்கர் பிரம்மாண்டத்தின் உச்சம் தொட்டு இந்திய அளவில் அதிக பொருட்செலவில் உருவான படம் என்ற பெருமையுடன் வெளியான எந்திரன் திரைப்படம் இந்திய அளவில் இருநூற்றி ஐம்பது கோடிக்கும் அதிகமாக முதல்முறை வசூல் நிகழ்த்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தது. இந்திய சினிமாவின் வர்த்தக எல்லைகளை விரிவுபடுத்திய திரைப்படம் என்று எந்திரன் திரைப்படம் கொண்டாடப்பட்ட நிலையில் எந்திரன் திரைப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதனைத்தொடர்ந்து ஷங்கருடன் இணையவில்லை.
இதையும் படிங்க.. தேவயானி மீது செம்ம கோபத்தில் வனிதா விஜயகுமார்.. என்ன விஷயம் தெரியுமா?
வானமே எல்லை என்ற கொள்கையுடைய தயாரிப்பு நிறுவனமான லைக்கா ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் திரைப்படத்தின் இரண்டாவது பாகமான டூ பாயிண்ட் ஓ திரைப்படத்தை உருவாக்கியது இந்த திரைப்படம் மீண்டும் மீண்டும் கிராபிக்ஸ் செய்யப்பட்டு தயாரிப்பு செலவு இரு மடங்காகி 500 கோடிக்கும் அதிகமான பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் படத்தின் செலவை ஈடுகட்ட போராடியது. லைக்கா நிறுவனம் 2.0 திரைப்படத்தின் வர்த்தகத்தை சமாளித்தாலும் இதன்பின்னர் ரஜினி நடிப்பில் உருவான தர்பார் திரைப்படத்தின் சரிவு அடுத்தடுத்து லைக்கா நிறுவனம் தயாரித்த திரைப்படங்களுக்கு பின்னடைவாக அமைந்தது.
இதன் காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்ட இயக்குனர்களில் சங்கர் முக்கியமான ஒருவராக மாறினார். கமலஹாசன் நடிப்பில் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்க திட்டமிட்டார் ஷங்கர். லைக்கா நிறுவனம் அடுத்தடுத்து தயாரிப்பு செலவை குறைத்து அதன் காரணமாக படம் நின்று போகும் சூழல் உருவானது. ஷங்கர் கேட்கும் பிரம்மாண்ட தொகையை செலவிட லைக்கா நிறுவனமும் லைகா நிறுவனம் கொடுக்கும் தொகையில் திரைப்படத்தை எடுக்க சங்கரும் தயாராக இல்லாத நிலையில் நீதிமன்ற படி ஏறி இந்தியன் 2 திரைப்படம் நிற்கும் நிலை ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஷங்கரை வைத்து திரைப்படம் எடுக்க தயாரிப்பாளர் இல்லை என்ற சூழல் உருவான நிலையில் தெலுங்கில் பிரம்மாண்ட படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளரான தில் ராஜூ ராம் சரண் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தை இயக்க சங்கரை அணுகினர். இதனைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு திரைப்படத்தை இயக்க பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
தெலுங்கில் பாகுபலி ட்ரிபிள் ஆர் உள்ளிட்ட திரைப்படங்கள் வசூலில் சக்கைப்போடு போட்ட பிரம்மாண்ட திரைப்படங்களாக உருவாகிவிட்ட நிலையில் தற்போது சங்கருக்கு வைத்து இயக்கும் திரைப்படம் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது சாதித்துக் காட்டி இந்திய திரையுலகத்திற்கு பிரம்மாண்டத்தை அறிமுகப்படுத்திய சங்கர் மீண்டும் தன்னுடைய முத்திரையை பதிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Director Shankar, Kollywood, Tamil Cinema