இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம், ‘இந்தியன் 2’. இதன் படப்பிடிப்பு சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் தொடங்கியது. கமல்ஹாசனின் 68 வது பிறந்த நாள் கடந்த நவம்பர் மாதம் கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு, ‘இந்தியன் 2’ படத்தில் இடம்பெறும் கமலின் புதிய தோற்றத்தை இயக்குநர் சங்கர் வெளியிட்டு, தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதில், எங்கள் பொக்கிஷம். பன்முகத் திறமை கொண்ட கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’ எனத் தெரிவித்திருந்தார்.
இயக்குநர் சங்கர், கமல்ஹாசன் மற்றும் ராம்சரண் ஆகிய இரண்டு நடிகர்களின் படங்களையும் ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார். அதற்காக மாதத்தில் 12 நாட்கள் என பிரித்து வேலை செய்கிறார். அதன்படி கடந்த தினங்களில் இயக்குநர் சங்கர் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டர். அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வந்தது.
இந்நிலையில் சங்கர் தற்போது ராம்சரணின் RC15 படத்தின் மீண்டும் தொடங்கி விட்டதாக ஹைதரபாத்தில் உள்ள சார்மினார் என்ற இடத்திலிருந்து புகைப்படத்தை வெளியிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரித்துள்ளார்.
Commencing the next schedule of #RC15 at the iconic Charminar pic.twitter.com/uubP5P0aV1
— Shankar Shanmugham (@shankarshanmugh) February 9, 2023
‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்குப்பிறகு நடிகர் ராம்சரண் இயக்குநர் சங்கருடன் கைகோத்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகி வரக்கூடிய இந்தப் படத்திற்கு தற்காலிகமாக RC15 என தலைப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்திருப்பதாகவும், நடுத்தர வயது முதல் வயதானவர் என இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, ஜெயராம், ஸ்ரீகாந்த், சுனில், நவீன் சந்திரா, சமுத்திரக்கனி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துவருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Director Shankar, Ram Charan