விஜய் சேதுபதியின் நடிப்புக்கு தேசிய விருதே கொடுக்கலாம் என்று மாமனிதன் படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை படங்களை தொடர்ந்து விஜய்சேதுபதி - இயக்குநர் சீனு ராமசாமி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இந்த திரைப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். அத்துடன் தன்னுடைய தந்தை இளையராஜாவுடன் சேர்ந்து படத்திற்கான இசையும் அமைத்துள்ளார்.
மாமனிதன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், நேற்று இப்படத்தின் சிறப்பு காட்சி திரையுலக பிரபலங்களுக்கு திரையிடப்பட்டது. இதில் கலந்துகொண்ட இயக்குனர் ஷங்கர் மாமனிதன் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் சீனு ராமசாமியையும் நடிகர் விஜய் சேதுபதியையும் வெகுவாக பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
#Maamanithan Got the satisfaction of watching a good film,Dir @seenuramasamy put his heart &soul and made this a realistic classic👏 @VijaySethuOffl ‘s brilliant performance deserves a national award.Music from Maestro @ilaiyaraaja & @thisisysr blended soulfully with the film.
— Shankar Shanmugham (@shankarshanmugh) June 23, 2022
அதில், “மாமனிதன் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை கொடுக்கிறது. சீனு ராமசாமியின் ஆத்மார்த்தமான பங்களிப்பு மூலம் இது யதார்த்தமான கிளாசிக் படமாக வந்துள்ளது. விஜய் சேதுபதியின் நடிப்புக்கு தேசிய விருதே கொடுக்கலாம். இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் உணர்வுப்பூர்வமான இசை படத்தோடு ஒன்றி பயணிக்க வைக்கிறது” என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.