Home /News /entertainment /

இயக்குனர் ஷங்கர் – ராம்சரண் படத்தின் அப்டேட்… வெளிநாட்டிற்கு செல்கிறது படக்குழு

இயக்குனர் ஷங்கர் – ராம்சரண் படத்தின் அப்டேட்… வெளிநாட்டிற்கு செல்கிறது படக்குழு

படத்தின் நாயகி கியாரா அத்வானியுடன் இயக்குனர் ஷங்கர்

படத்தின் நாயகி கியாரா அத்வானியுடன் இயக்குனர் ஷங்கர்

RC 15 Shankar ஆர்.சி. 15 ஒர்க்கிங் டைட்டிலாக இருந்தாலும், படத்திற்கு அதிகாரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நட்சத்திரம் ராம்சரண் நடித்து வரும் படத்தின் அப்டேட் அவரது ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

    தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனாக இருக்கும் ராம்சரண் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்தியுள்ளார். கடைசியாக ராம்சரணின் நடிப்பில் வெளிவந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தில் ராம் சரணின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது. இதையடுத்து, அவர் ஷங்கர் இயக்கும் ஆர்.சி. 15 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    இதையும் படிங்க - முறையாக வரி செலுத்திய மஞ்சு வாரியர்... பாராட்டி கெளரவித்த மத்திய அரசு! 

    இந்த படத்திற்கு ஆர்.சி. 15 ஒர்க்கிங் டைட்டிலாக இருந்தாலும், படத்திற்கு அதிகாரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரி கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது.

    அவருக்கு ஜோடியாக இந்தியில் பிரபலமாக இருக்கும் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். இந்நிலையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பு டிசம்பர் மாதம் நிறைவு பெற்று விடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க - விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விளம்பர படத்தில் நடிக்கிறார் தமிழக முதல்வர்

    தற்போதைய சூழலில் படத்தின் 60 சதவீத ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. அடுத்த கட்டமாக படக்குழுவினர் படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக அடுத்தமாதம் படக்குழு வெளிநாட்டிற்கு செல்கிறது.

    விஜய்யின் வாரிசு படத்தை தயாரிக்கும் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்தான் இந்த படத்தை தயாரிக்கிறது. தமன் இசையமைக்கிறார். தற்போது சுமார் 1000 கலைஞர்கள் இடம்பெறும் பாடல் மற்றும் சண்டைக் காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.

    ஜெயராம், சுனில், தில் ராஜு உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளார். இந்த படத்திற்கு கார்த்திக் சுப்பராஜ் திரைக்கதை அமைத்துள்ளார். வசனங்களை எழுதியிருப்பவர் மாதவ் புரா.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Director Shankar

    அடுத்த செய்தி