Home /News /entertainment /

மகளின் திருமண வரவேற்பு... பிரபலங்களை அழைக்கும் இயக்குநர் ஷங்கர்!

மகளின் திருமண வரவேற்பு... பிரபலங்களை அழைக்கும் இயக்குநர் ஷங்கர்!

அழைப்பிதழ் கொடுக்கும் ஷங்கர்

அழைப்பிதழ் கொடுக்கும் ஷங்கர்

கொரோனா குறைந்து ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதும் சென்னையில் திருமண வரவேற்பு நடத்தப்படும் என அப்போதே கூறப்பட்டது.

    இயக்குநர் ஷங்கர் தனது மகள் ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பிற்காக, பிரபலங்கள் மற்றும் திரையுலகினரை சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.

    இயக்குனர் ஷங்கருக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களில் மூத்தவர் ஐஸ்வர்யா. இளையவர் அதிதி விருமன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார். இவர்கள் இருவருமே மருத்துவர்கள். இவர்களில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தொழிலதிபர் தாமோதன் என்பவரது மகன் ரோஹித்துக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைப்பெற்றது.

    தாமோதரன் தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் விளையாடும், மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளராவார். இவரது மகன் ரோஹித், புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். இதற்கிடையே ஐஸ்வர்யா - ரோஹித்தின் திருமணம் மகாபலிபுரத்தில் பிரமாண்ட செட் அமைத்து நடத்தப்பட்டது. பிரபல கலை இயக்குனர் முத்துராஜ் இந்த அரங்கை அமைத்திருந்தார். கொரோனா உச்சத்தில் இருந்த அந்த சமயத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டிருந்தது. இதனால் அத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.

    அரபிக் குத்து பாடலுக்கு ஷில்பா ஷெட்டி, ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் அட்டகாச நடனம்!

    Director Shankar invites Celebrities for his daughter Aishwarya wedding reception, Shankar daughter, aditi shankar, aishwarya shankar age, aishwarya shankar instagram, arjith shankar, dr aishwarya shankar, aishwarya shankar husband, aditi shankar instagram, aishwarya shankar carnatic, aishwarya shankar marriage, aishwarya shankar rohit, aishwarya shankar rohit wedding reception, ஷங்கர் மகள்கள், ஐஸ்வர்யா ஷங்கர், ஐஸ்வர்யா ஷங்கர் திருமணம், ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு, ஐஸ்வர்யா ஷங்கர் ரோஹித்

    கொரோனா குறைந்து ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதும் சென்னையில் திருமண வரவேற்பு நடத்தப்படும் என அப்போதே கூறப்பட்டது. அதற்கேற்றபடி வரும் மே 1-ம் தேதி ஐஸ்வர்யா - ரோஹித்தின் திருமண வரவேற்பு சென்னையில் நடக்கவிருக்கிறது. இதற்காக ஷங்கரும் அவரது மனைவியும் திரையுலகினரை சந்தித்து அழைப்பிதழ்களை வழங்கி வருகின்றனர்.

    Baakiyalakshmi: தங்கையின் முதல் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடிய பாக்கிய லட்சுமி இனியா!

    அதன்படி பிரபல தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோனுக்கு ஷங்கர் தனது மனைவியுடன் சென்று திருமண அழைப்பிதழை வழங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Director Shankar, Tamil Cinema

    அடுத்த செய்தி