Home /News /entertainment /

கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற இயக்குநர் ஷங்கர்!

கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற இயக்குநர் ஷங்கர்!

இயக்குநர் ஷங்கர்

இயக்குநர் ஷங்கர்

சமீபத்தில் இயக்குனர் ஷங்கருக்கு வேல்ஸ் விஸ்டாஸ் இன்ஸ்டிட்யூட் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

    இயக்குநர் ஷங்கருக்கு வேல்ஸ் விஸ்டாஸ் இன்ஸ்டிட்யூட் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. 

    தமிழ் சினிமாவில் தனது திரைப்படங்கள் மூலம் பல புதுமைகளை கொண்டு வந்தவர் இயக்குனர் ஷங்கர். தற்போது அவர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சித்தார்த் நடிப்பில் 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் துவங்கவிருக்கிறார்.

    இதற்கிடையில், சமீபத்தில் இயக்குனர் ஷங்கருக்கு வேல்ஸ் விஸ்டாஸ் இன்ஸ்டிட்யூட் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற 12-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சங்கர் இன்று காலை கெளரவ டாக்டர் பட்டம் பெற்றார். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    விஜய்யின் வாரிசு படப்பிடிப்பு படம் இணையத்தில் மீண்டும் லீக்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதோடு, முன்னாள் இந்திய மற்றும் சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் வேல்ஸ் பல்கலைக்கழகம் இன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தவிர, ஷங்கர் நடிகர் ராம்சரணின் 'RC15' படத்தின் முக்கிய ஷெட்யூலை சமீபத்தில் முடித்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Director Shankar

    அடுத்த செய்தி