ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

முக்கிய கதையில் நடிக்க விஜய்யை அணுகிய ஷங்கர்?

முக்கிய கதையில் நடிக்க விஜய்யை அணுகிய ஷங்கர்?

ஷங்கர் - விஜய்

ஷங்கர் - விஜய்

ஷங்கரின் கனவுப் படமான 'வேள்பாரி'யில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவரின் முதல் விருப்பம் தளபதி விஜய் தான் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    இயக்குநர் ஷங்கர் இயக்கும் வேள்பாரி படத்தில் நடிக்க நடிகர் விஜய் முதலில் அணுகப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   

    எழுத்தாளரும், எம்.பி-யுமான சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ நாவலை அடிப்படையாக வைத்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் விரைவில் மூன்று பாகமாக படம் இயக்க திட்டமிட்டிருக்கும் செய்தியை முன்பே தெரிவித்தோம். இந்தப் படத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், அவருடன் யாஷ் மற்றும் ரன்வீர் சிங்கும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையில், ஷங்கரின் கனவுப் படமான 'வேள்பாரி'யில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவரின் முதல் விருப்பம் தளபதி விஜய் தான் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. பல மாதங்களுக்கு முன்பு அவர் கதையையும் கேட்டாராம். பின்னர் இந்தப் படத்தின் தயாரிப்பு பொறுப்பை சன் பிக்சர்ஸிடம் ஒப்படைக்க எண்ணினாராம் இயக்குநர். ஆனால் அதன் பிறகு படத்தின் வேலைகள் சூடு பிடிக்காமல் இருந்துள்ளது. பின்னர் ஷங்கர் ஒரு புதிய தயாரிப்பாளருடன் விஜய்யை அணுகியபோது, ​​தளபதி 67 மற்றும் தளபதி 68 என தனது அடுத்தடுத்த படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதால், ஷங்கர் படத்துக்கு தேதிகளை ஒதுக்க முடியவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

    முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய உதயநிதி... முடிவை மாற்றிய கமல் ஹாசன்!

    விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக இருந்த ஷங்கர், அவரை வைத்து நண்பன் படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay