கார்த்தியின் படத்தில் கதாநாயகியாகும் இயக்குநர் ஷங்கரின் மகள்!

அதிதி

ஷங்கரின் மகள் நடிக்கயிருப்பதாக எந்த தகவலும் இல்லாத நிலையில், திடீரென விருமனில் நாயகியாக ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார் என்பது திரையுலகினருக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  கார்த்தி அடுத்து முத்தையா இயக்கத்தில் நடிக்கிறார், சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் அந்தப் படத்தை தயாரிக்கிறது என சென்ற வாரம் செய்தி வெளியிட்டிருந்தோம். நேற்று அந்தப் படத்தின் பெயர் மற்றும் கதாநாயகி குறித்த தகவல்களை வெளியிட்டனர்.

  கார்த்தி இதற்கு முன் முத்தையா இயக்கத்தில் கொம்பன் படத்தில் நடித்திருந்தார். படம் அனைத்து சென்டர்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பொன்னியின் செல்வன் படம் முடிந்த நிலையில் மீண்டும் முத்தையா இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு விருமன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

  விருமனில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக அறிமுகமாகிறார். ஷங்கரின் மகள் நடிக்கயிருப்பதாக எந்த தகவலும் இல்லாத நிலையில், திடீரென விருமனில் நாயகியாக ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார் என்பது திரையுலகினருக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. யுவன் படத்துக்கு இசையமைக்கிறார்.

  முத்தையாவின் வழக்கமான படம் போல் கிராமத்துப் பின்னணியில் இந்தப் படம் தயாராகிறது. ஆக்ஷன் அடிதடிக்கும், சென்டிமெண்டுக்கும் பஞ்சமிருக்காது. படம் குறித்து கருத்து கூறியிருக்கும் சூர்யா, "அடுத்தப் படத்தை கார்த்தியுடன் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். முத்தையா இயக்கும் அழகான குடும்பப் பொழுதுப்போக்குப் படம்" என்று கூறியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Director Shankar daughter Aditi debut as heroine in Karthi Viruman, shankar family, aditi shankar, aditi shankar linkedin, aditi shankar, director shankar daughter, aditi shankar husband, aditi shankar director, aditi shankar age, aditi shankar instagram, இயக்குநர் ஷங்கர், விருமன் திரைப்படம், கார்த்தி, அதிதி ஷங்கர், கார்த்தி அதிதி ஷங்கர், அதிதி ஷங்கர் இன்ஸ்டாகிராம்
  விருமண்


  விருமன் குறித்து கார்த்தி, "மண் சார்ந்த கதைகள் என்றுமே என் மனதிற்கு நெருக்கமானவை. அதிலும் மீண்டும் முத்தையாவுடனும், யுவனுடனும் இணைவது பெரும் மகிழ்ச்சி" என குறிப்பிட்டுள்ளார்.



  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: