Home /News /entertainment /

விருமன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் இயக்குநர் ஷங்கர்

விருமன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் இயக்குநர் ஷங்கர்

இயக்குநர் ஷங்கர்

இயக்குநர் ஷங்கர்

விருமன் திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கார்த்தி,  சூர்யாவுடன் இயக்குநர் ஷங்கர் கலந்து கொள்கிறார். 

  • News18
  • Last Updated :
கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஷங்கர் கலந்துகொள்கிறார். 

கொம்பன் முத்தையா இயக்கியுள்ள விருமன் திரைப்படத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். சூர்யா தயாரித்துள்ள அந்தப் படத்தின் நாயகியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வரும் 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இருக்கும் படத்தின் பாடல்களை வரும் மூன்றாம் தேதி மதுரையில் வெளியிடுகின்றனர்.  இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அந்த விழாவில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியுடன் இயக்குநர்  ஷங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.  அதேபோல் பாடல் வெளியீட்டுடன் சேர்த்து படத்தின் ட்ரெய்லரை பட குழுவினர் வெளியிடுகின்றனர்.

Also read... ஜிகர்தண்டா 2 குறித்து முக்கிய அப்டேட்டை கூறிய கார்த்திக் சுப்புராஜ்

கொம்பன் திரைப்படம் போல உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விருமன் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியடையும் என படக் குழுவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Director Shankar

அடுத்த செய்தி