ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Shankar: மணிரத்னம் ஒரு கிங்... பொன்னியின் செல்வன் படத்தைப் பாராட்டிய ஷங்கர்!

Shankar: மணிரத்னம் ஒரு கிங்... பொன்னியின் செல்வன் படத்தைப் பாராட்டிய ஷங்கர்!

ஷங்கர் - மணிரத்னம்

ஷங்கர் - மணிரத்னம்

இயக்குநர் மணிரத்னம் திரைப்படம் உருவாக்குவதில் ராஜா என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் என இயக்குனர் ஷங்கர் பாராட்டு. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் திரைப்படம் வசீகரிக்கிறது என இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட நடித்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை துறையினரும் கொண்டாடி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இயக்குநர் ஷங்கர் இணைந்துள்ளார்.  பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த அவர் பொன்னியின் செல்வன் திரைப்படம் வசிகரீக்கிறது என பதிவிட்டுள்ளார். அத்துடன் தமிழில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சிறந்த வரலாற்று திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குநர் மணிரத்னம் திரைப்படம் உருவாக்குவதில் ராஜா என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் என இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார்.

இளையராஜா ரசிகர்களை ஏமாற்றிய எங்க ஊரு ராசாத்தி பாடல்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மா மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட படக் குழுவினருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Published by:Shalini C
First published:

Tags: Director Shankar