நடிகர் ஷங்கர் தனது மகளின் திருமண வரவேற்பை திடீரென நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இயக்குனர் ஷங்கருக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களில் மூத்தவர் ஐஸ்வர்யா. இளையவர் அதிதி, விருமன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார். இவர்கள் இருவருமே மருத்துவர்கள். இவர்களில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தொழிலதிபர் தாமோதரன் என்பவரது மகன் ரோஹித்துக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைப்பெற்றது.
தாமோதரன் தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் விளையாடும், மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளராவார். இவரது மகன் ரோஹித், புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். இதற்கிடையே ஐஸ்வர்யா - ரோஹித்தின் திருமணம் மகாபலிபுரத்தில் பிரமாண்ட செட் அமைத்து நடத்தப்பட்டது.
பிரபல கலை இயக்குனர் முத்துராஜ் இந்த அரங்கை அமைத்திருந்தார். கொரோனா உச்சத்தில் இருந்த அந்த சமயத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டிருந்தது. இதனால் அத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.
அமைச்சர் ரோஜா செல்வமணிக்கு இயக்குநர் பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா!
கொரோனா குறைந்து ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதும் சென்னையில் திருமண வரவேற்பு நடத்தப்படும் என அப்போதே கூறப்பட்டது. இதையடுத்து வரும் மே 1-ம் தேதி ஐஸ்வர்யா - ரோஹித்தின் திருமண வரவேற்பு நடைப்பெறுவதாக கடந்த மாதமே திரையுலகினரை சந்தித்து, அழைப்பிதழ் கொடுத்தனர் ஷங்கரும், அவரது மனைவியும்.
ஒயின் ஷாப்பில் பாட்டில் பாட்டிலாக மதுபானம் வாங்கிய ஜீ தமிழ் சீரியல் நடிகை!
இந்நிலையில் தற்போது தனது மகள் ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக ஷங்கரிடம் இருந்து அனைவருக்கும் செய்தி வந்துள்ளதாம். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவில்லை.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Director Shankar, Tamil Cinema