Home /News /entertainment /

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்…

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்…

திருச்சிற்றம்பலம் போஸ்டர் - இயக்குனர் ஷங்கர்.

திருச்சிற்றம்பலம் போஸ்டர் - இயக்குனர் ஷங்கர்.

தனுஷ் படங்களிலேயே இந்தப் படம் அதிக வசூலை குவிக்கும் என்று சினிமா வர்த்தக வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை இயக்குனர் ஷங்கர் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    தனுஷ், நித்யா மேனன், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    தனுஷ் படங்களிலேயே இந்தப் படம் அதிக வசூலை குவிக்கும் என்று சினிமா வர்த்தக வல்லுனர்கள் கணித்துள்ளனர். இந்தப் படம் கடந்த மாதம் 18-ம்தேதி வெளியான நிலையில், இதற்கு பின்னர் திரைக்கு வந்த படங்கள் ரசிகர்களின் விருப்பத்தை பெற தவறிவிட்டன.

    பச்சை நிற புடவையில் ஜொலிக்கும் நடிகை கத்ரீனா கைஃப்!

    இதனால், திருச்சிற்றம்பலம் படததிற்கு அட்வான்டேஜ் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், திருச்சிற்றம்பலம் படத்தை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-

    திருச்சிற்றம்பலம் ஓர் அழகான திரைப்படம். எந்த வகையில் என்றால், மனதுக்கு வலியை கொடுக்கும் காட்சிகளைத் தொடர்ந்து அற்புதமான காட்சிகள் இடம்பெற்றிருக்கும். நித்யா மேனனின் கேரக்டர் நன்றாக எழுதப்பட்டுள்ளது. அவரது நடிப்பு மனதை கவர்கிறது. படத்திற்கான கதையை இயக்குனர் மித்ரன் ஜவகர் சிறப்பாக எழுதியுள்ளார். வழக்கம்போல தனுஷ் – அனிருத்தின் கூட்டணியில் பாடல்கள் கலக்கலாக இருக்கின்றன. பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் நடிப்பு பிரமாதம். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.



    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தனுஷின் அடுத்த படமான நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் 30-ம்தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார்.

    ராஜமெளலியின் பாகுபலி படத்தில் பல ஹாலிவுட் படங்களின் காட்சிகள் - வைரலாகும் வீடியோ

    தனுஷ் தற்போது வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் உருவாகி வருகிறது. தெலுங்கில் இதற்கு சார் என்று டைட்டில் வைத்துள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Director Shankar

    அடுத்த செய்தி