Home /News /entertainment /

’அப்பாவும் மகன்களும்’ செல்வராகவன் பகிர்ந்த அட்டகாசமான படம்!

’அப்பாவும் மகன்களும்’ செல்வராகவன் பகிர்ந்த அட்டகாசமான படம்!

தனுஷ் குடும்பம்

தனுஷ் குடும்பம்

தனது அப்பா கஸ்தூரி ராஜா மற்றும் தம்பி தனுஷுடன் இருக்கும் புகைப்படைத்தை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.

    கஸ்தூரி ராஜாவுடன் அவரது மகன்கள் செல்வராகவன் மற்றும் தனுஷ் இருக்கும் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    என் ராசாவின் மனசிலே, சோலையம்மா, கரிசக்காட்டு பூவே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் கஸ்தூரிராஜா. இவரது மூத்த மகன் இயக்குநர் செல்வராகவன், இளையமகன் நடிகர் தனுஷ். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என செல்வராகவன் இயக்கிய படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. தற்போது அவர் ‘நானே வருவேன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

    ஆரம்பத்தில் தனது அண்ணன் செல்வராகவன் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான தனுஷ் பின்னர் தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். இயக்குநர் வெற்றிமாறன் தனுஷின் வேறு பக்கத்தை திரையில் காட்டினார். இதன் பலனாக அவரது ஆடுகளம், அசுரன் ஆகியப் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய தனுஷ், இரண்டு தேசிய விருதுகளை வென்றார்.



    இந்நிலையில் தற்போது தனது அப்பா கஸ்தூரி ராஜா மற்றும் தம்பி தனுஷுடன் இருக்கும் புகைப்படைத்தை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். இந்தப் படம் தற்போது ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Dhanush, Director selvaragavan

    அடுத்த செய்தி