Home /News /entertainment /

ஆயிரத்தில் ஒருவன் கற்றுக் கொடுத்த பாடம்... உண்மையை உடைத்த செல்வராகவன்!

ஆயிரத்தில் ஒருவன் கற்றுக் கொடுத்த பாடம்... உண்மையை உடைத்த செல்வராகவன்!

செல்வராகவன்

செல்வராகவன்

படம் வெளியாகி 11 ஆண்டுகள் கழிந்த நிலையில், தற்போது இது குறித்த உண்மை ஒன்றை பொதுவெளியில் போட்டுடைத்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

    ’ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் ஒரு பிரமாண்ட படம் என பேசப்பட வேண்டும் என்பதற்காக பொய் சொன்னதாக இயக்குநர் செல்வராகவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென் நடித்திருந்த படம் ஆயிரத்தில் ஒருவன். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். 2010-ல் வெளியான இந்தப் படம் சோழ வம்சத்தின் வரலாற்று வீழ்ச்சி மற்றும் பாண்டிய வம்சத்தின் எழுச்சியை மையப்படுத்தி ஃபேண்டஸி படமாக உருவாக்கப்பட்டிருந்தது.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தப் படம் வெளியாகி 11 ஆண்டுகள் கழிந்த நிலையில், தற்போது இது குறித்த உண்மை ஒன்றை பொதுவெளியில் போட்டுடைத்துள்ளார் இயக்குநர் செல்வராகவன். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உண்மையான பட்ஜெட் 18 கோடி. ஆனால் இதை ஒரு மெகா பட்ஜெட் படமாக மிகைப்படுத்த 32 கோடி என அறிவிக்க முடிவு செய்தோம். என்ன ஒரு முட்டாள்தனம்! படம் உண்மையான பட்ஜெட்டை வசூலித்தாலும், அது சராசரியாகவே கருதப்பட்டது! முரண்பாடுகள் எதுவாக இருந்தாலும் பொய் சொல்லக் கூடாது எனக் கற்றுக் கொண்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Director selvaragavan

    அடுத்த செய்தி