• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 'நானே வருவேன்’ படத்தில் ஆத்ம நண்பனை கழற்றிவிட்ட செல்வராகவன்

'நானே வருவேன்’ படத்தில் ஆத்ம நண்பனை கழற்றிவிட்ட செல்வராகவன்

செல்வராகவன்

செல்வராகவன்

செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜா - அர்விந்த் கிருஷ்ணா கூட்டணிக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு.

  • Share this:
    செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு இரு தினங்கள் முன்பு தொடங்கியது. படப்பிடிப்பு தொடங்கியதை முன்னிட்டு தயாரிப்பாளர் தாணு வெளியிட்ட போஸ்டர்களைப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி. ஒளிப்பதிவாளர் என்ற இடத்தில் அர்விந்த் கிருஷ்ணாவின் பெயர் இல்லை.

    செல்வராகவனுக்கு எப்படி துள்ளுவதோ இளமை இயக்குனராக முதல் படமோ அதேபோல் ஒளிப்பதிவாளராக அர்விந்த் கிருஷ்ணாவுக்கும் அதுவே முதல் படம். தொடர்ந்து செல்வராகவனின் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். இந்தப் படங்களுக்கு இசை அமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. இந்த முக்கூட்டணிக்கு திரையுலகில் நல்ல பெயர் இருந்தது. இவர்கள் மூவரும் இணைந்து வொயிட் எலிபென்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். தொடர்ச்சியாக படங்கள் தயாரிக்க வேண்டும் என்பது திட்டம்.

    ஆனால், எந்தப் படமும் தயாரிக்கும் முன்பே செல்வராகவன், யுவன் இடையே பிரச்சனை ஏற்பட்டு கூட்டணி முறிந்தது. யுவனுடன் உறவை முறித்துக் கொண்டதும் செல்வராகவன் செய்த முதல் வேலை, அதுவரை தனது படங்களில் பங்களிப்பு செய்துவந்த பாடலாசிரியர் முத்துக்குமார், ஒளிப்பதிவாளர் அர்விந்த் கிருஷ்ணா இருவரையும் புறக்கணித்தது. அதற்கு செல்வராகவனுக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்.

    Director Selvaraghavan removed cinematographer Arvind Krishna from Naane Varuven, Naane Varuven movie, Naane Varuven shooting, Naane Varuven update, Dhanush, Selvaraghavan, Naane Varuven, selvaraghavan dhanush movie, selvaraghavan directed movies, selvaraghavan wife, selvaraghavan next movie, dhanush selvaraghavan next movie, selvaraghavan first movie, selvaraghavan new movie, dhanush movies, selvaraghavan movies list in tamil, நானே வருவேன், நானே வருவேன் திரைப்படம், நானே வருவேன் படப்பிடிப்பு, செல்வராகவன் தனுஷ் திரைப்படம், செல்வராகவன் இயக்கிய திரைப்படங்கள், செல்வராகவன் மனைவி, செல்வராகவன் அடுத்த படம், தனுஷ் செல்வராகவன் அடுத்த படம், செல்வராகவன் முதல் படம்,
    7ஜி ரெயின்போ காலனி படப்பிடிப்பில்


    போர் என்றால் அதற்கு முடிவும் இருக்கும்தானே? (இது இளையராஜாவுக்கு பொருந்தாது). செல்வராகவன் - யுவன் கூட்டணி நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் மீண்டும் இணைந்தது. மறக்காமல் அதில் பழைய நண்பர் அர்விந்த் கிருஷ்ணாவையும் சேர்த்துக் கொண்டார். இப்போது அடுத்தப் படம் நானே வருவேன் தொடங்கியுள்ளது. இதில் யுவன் இசை, அர்விந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு என்றே முதலில் வெளியிட்ட போஸ்டர்களில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், படப்பிடிப்பு தொடங்கியதை அறிவித்த புதிய போஸ்டர்களில் அர்விந்த் கிருஷ்ணா பெயர் இல்லை. அதற்குப் பதில் யாமின் யக்னாமூர்த்தி என்பவரின் பெயர் இடம்பெற்றுள்ளது.



    அர்விந்த் கிருஷ்ணா ஏற்கனவே ஒப்புக் கொண்ட படத்தில் பணிபுரிய சென்றதால் விலகிக் கொண்டாரா இல்லை விலக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை. இப்போது ஒளிப்பதிவாளராக பொறுப்பேற்றிருக்கும் யாமினி யக்னமூர்த்தி செல்வராகவன் நடித்திருக்கும் சாணிக்காயிதம் படத்தின் ஒளிப்பதிவாளர். மிகப்பிரமாதமாக சாணிக்காயிதத்துக்கு இவர் ஒளிப்பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அவரது தொழில்நேர்த்திப் பிடித்து செல்வராகவன் அவரை ஒப்பந்தம் செய்திருக்கவும் வாய்ப்புள்ளது. எப்படியோ, முதலில் அறிவித்தபடி செல்வராகவனின் பழைய நண்பர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: