Home /News /entertainment /

வாய்ப்பளித்ததற்கு நன்றி ப்ரோ... மோகன் ஜி-யை புகழ்ந்த இயக்குநர் செல்வராகவன்!

வாய்ப்பளித்ததற்கு நன்றி ப்ரோ... மோகன் ஜி-யை புகழ்ந்த இயக்குநர் செல்வராகவன்!

செல்வராகவன் - மோகன் ஜி

செல்வராகவன் - மோகன் ஜி

பகாசூரன் படத்தில் செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    செல்வராகவனுடன் பணிபுரியும் தனது கனவு நிறைவேறியதாக  அவருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி படத்துடன் மோகன் ஜி தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். 

    'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' ஆகியப் படங்களை இயக்கியவர் மோகன்.ஜி. இதில் திரெளபதி படமும், ருத்ர தாண்டவமும் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. இதனையடுத்து தற்போது 'ஜி.எம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிக்கும் 'பகாசூரன்' படத்தை இயக்கி வருகிறார்.

    இப்படத்தில் செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    காபி வித் கரண் நிகழ்ச்சியில் சமந்தாவை அலேக்காக தூக்கிய அக்‌ஷய் குமார்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    இந்நிலையில் மோகன்.ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவனுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை வெளியிட்டு, "இது ஒரு ட்ரீம் செல்ஃபி... இந்த ட்ரீம் தருணத்தை ஏற்படுத்தியதற்கு, நன்றி செல்வராகவன் சார்" எனக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள செல்வராகவன், “வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி ப்ரோ! உங்கள் அரவணைப்பு மற்றும் பாசம் உண்மையில் நெஞ்சை தொட்டது. உங்களுடனும் உங்கள் சிறந்த குழுவினருடனும் பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Director selvaragavan

    அடுத்த செய்தி