Selvaraghavan: பெரியார் குறித்த சர்ச்சை - மன்னிப்பு கேட்ட இயக்குநர் செல்வராகவன்

Selvaraghavan: பெரியார் குறித்த சர்ச்சை - மன்னிப்பு கேட்ட இயக்குநர் செல்வராகவன்

செல்வராகவன்

சமூக வலைத்தளங்களில் பெரியார் ஆதரவாளர்களிடமிருந்து எதிர் வினைகள் வரத் தொடங்கின.

  • Share this:
    சமூக வலைதளங்களில் தன் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன் அதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் செல்வராகவன் இயக்கிய ’நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் வெளியானது. அதில் சைக்கோ கொலைகாரன் ஆக எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார். அவர் புகைப்படத்தில் ராமசாமி என்று பெயரிடப் பட்டிருந்தது.



    Nawazuddin Siddiqui: கொரோனாவால் விவாகரத்து முடிவு மாற்றம்: மனைவியுடன் இணைந்த ‘பேட்ட’ வில்லன்!

    இதற்கிடையே சமீபத்தில் செல்வராகவன் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் நீங்கள் ராமசாமி என்று ஒரு தனி நபரை குறிப்பிட்டு தானே பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செல்வராகவன் ஆம் என்று பதில் அளித்திருந்தார்.

    அதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பெரியார் ஆதரவாளர்களிடமிருந்து எதிர் வினைகள் வரத் தொடங்கின. இந்நிலையில் தற்போது இது குறித்த விளக்கத்தை ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். நெறியாளர் கேட்ட கேள்வி புரியாமல் ஆம் என்று சொல்லி விட்டதாகவும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டு, மன்னிப்பு கோரியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: