ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தனுஷின் 'நானே வருவேன்' - செல்வராகவன் வெளியிட்ட மாஸ் அப்டேட்

தனுஷின் 'நானே வருவேன்' - செல்வராகவன் வெளியிட்ட மாஸ் அப்டேட்

naane varuven

naane varuven

Director Selvaraghavan | நானே வருவேனில் தனுஷுடன் யோகி பாபு, இந்துஜா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். வி.கிரியேஷன்ஸ் சார்பில் தாணு இப்படத்தை தயாரிக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

செல்வராகவன் தனுஷின் 'நானே வருவேன்' படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிக்க ஆரம்பித்த தனுஷ் பாதியில் விட்டு தெலுங்கில் வெங்கி அட்லூரியின் 'வாத்தி' படத்தில் நடிக்கச் சென்றார். எனினும் படவேலைகளை செல்வராகவன் நிறுத்தவில்லை. படம் குறித்த சுவாரஸியமான அப்டேட்டை அவர் இன்று அளித்துள்ளார்.

'நானே வருவேன்' படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். செல்வா - யுவன் கூட்டணி இதற்கு முன் காலத்தால் அழியாத பல பாடல்களை தந்துள்ளது. 'நானே வருவேன்' படத்தின் ஆல்பத்தை சற்று முன்பு நிறைவு செய்ததாகவும், அதை உங்கள் அனைவரிடம் தெரிவிக்க எனக்கு பொறுமையில்லை எனவும் சமூகவலைத்தளத்தில் செல்வராகவன் கூறியுள்ளார். அத்துடன் யுவனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

நானே வருவேனில் தனுஷுடன் யோகி பாபு, இந்துஜா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். வி.கிரியேஷன்ஸ் சார்பில் தாணு இப்படத்தை தயாரிக்கிறார். படம் தொடங்கி ஒரு வருடம் கடந்த பிறகும் தனுஷ் முழுமையாக கால்ஷீட் தராமல் படத்தை இழுத்தடிப்பது அவரது ரசிகர்களுக்கே ஏமாற்றமளித்துள்ளது. வாத்தி முடிந்ததும் நானே வருவேனை அவர் முடிப்பார் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.

தனுஷ் நடித்திருக்கும் 'மாறன்' திரைப்படம் விரைவில் ஓடிடி வெளியீடாக வரவிருக்கிறது. அதையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் 'திருச்சிற்றம்பலம்' படம் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள ஆங்கிலத் திரைப்படம் 'தி க்ரே மேன்' நெட்பிளிக்ஸ் வெளியீடாக வரவுள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Dhanush, Director selvaragavan, Tamil Cinema, Yuvan Shankar raja