முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''எங்கு தேடுவேன்.. நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள்'' - உருக்கமாக பதிவிட்ட செல்வராகவன்

''எங்கு தேடுவேன்.. நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள்'' - உருக்கமாக பதிவிட்ட செல்வராகவன்

இயக்குநர் செல்வராகவன்

இயக்குநர் செல்வராகவன்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் செல்வராகவன் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான 'நானே வருவேன்' படத்தை இயக்கியிருந்தார். இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள் என இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் செல்வராகவன். அதன் பிறகு அவரது இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார். பிறகு அவரது படக்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் செல்வராகவன் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான 'நானே வருவேன்' படத்தை இயக்கியிருந்தார். இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த 'பகாசூரன்' சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

மேலும் இயக்குநர் செல்வராகவன் அடிக்கடி ட்விட்டரில் தனது அனுபவம் குறித்தும், பல நேரங்களில் துன்பத்தில் இருப்பவர்களுக்கு கைக்கொடுக்கும் விதமாகவும் அவர் எழுத்துகள் ட்விட்டர் தளத்தில் அதிகமாக வரும்.

அந்த வகையில் தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன் என்று வறுத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த பதிவு அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Director selvaragavan