ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

புதுப்பேட்டை 2ம் பாகம் உருவாகுமா? செல்வராகவன் பதில்

புதுப்பேட்டை 2ம் பாகம் உருவாகுமா? செல்வராகவன் பதில்

நடிகர் - இயக்குனர் செல்வராகவன்

நடிகர் - இயக்குனர் செல்வராகவன்

இயக்குனர் என்ற அளவில் செல்வராகவன் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், காதல் கொண்டேன் என தரமான படைப்புகளை தமிழ் சினிமாவுக்கு தந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்து வரவேற்பை பெற்ற புதுப்பேட்டை படத்தின் 2ம் பாகம் குறித்து செல்வராகவன் பதில் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருந்து வரும் செல்வராகவும், சமீபத்தில் வெளிவந்த பீஸ்ட் மற்றும் சாணி காயிதம் ஆகிய படங்களில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

குறிப்பாக சாணி காயிதம் படத்தில் இவரது நடிப்பு பரவலாக பேசப்படுகிறது. ஆனால், இயக்குனர் என்ற அளவில் செல்வராகவன் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், காதல் கொண்டேன் என தரமான படைப்புகளை தமிழ் சினிமாவுக்கு தந்துள்ளார்.

இதையும் படிங்க - தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் தனுஷின் கேரக்டர் போஸ்டர் வெளியீடு…

தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நானே வருவேன்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்ற நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றனர். இந்த படத்திற்கான கதையை தனுஷ் எழுதியிருப்பது என்பது சுவாரசிய தகவல் ஆகும்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்த செல்வராகவன் சாணி காயிதம், நானே வருவேன் உள்ளிட்ட படங்கள் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். பேட்டியில் அவர் கூறியதாவது-

சாணி காயிதம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஒரு நல்ல அணி அமைந்து இந்த வெற்றியை உருவாக்கியுள்ளது. கீர்த்தி சுரேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க - பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸிற்கு ‘மாலத்தீவை’ அவ்ளோ பிடிச்சிருச்சாம்!

நானே வருவேன் படத்தில் நடிப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், படக்குழுவினர் என்னை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்து விட்டனர். ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை படங்களின் அடுத்த பாகம் குறித்து ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது. சரியான நேரத்தில் இதற்கான பணிகளை நாங்கள் தொடங்குவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Actor dhanush, Director selvaragavan