ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

செல்வராகவன் நடித்துள்ள பகாசுரன் திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது…

செல்வராகவன் நடித்துள்ள பகாசுரன் திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது…

பகாசுரன் படத்தில் செல்வராகவன்

பகாசுரன் படத்தில் செல்வராகவன்

செல்வராகவன் நடிப்பில் வெளிவந்த சாணி காயிதம், பீஸ்ட், நானே வருவேன் படங்கள் வரவேற்பை பெற்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

செல்வராகவன் நாயகனாக நடித்திருக்கும் பகாசூரன் திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இயக்குனர் செல்வராகவன் பகாசுரன் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். அந்த திரைப்படத்தை மோகன்.G இயக்கியுள்ளார்.

அவரின் திரௌபதி, மற்றும் ருத்ரதாண்டவம் ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியில் வெற்றியடைந்தன.  அதன் காரணமாக பகாசூரன் திரைப்படமும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அந்த படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நிறைவடியும் தருவாயில் உள்ளன.

கே.ஜி.எஃப் பட நிறுவனம் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்… படத்தின் டைட்டில் அறிவிப்பு

இந்த நிலையில் படத்தை பிரபலப்படுத்தும் வேலையில் மோகன்.G ஈடுபட்டு வருகிறார். அதில் ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் படத்தின் டிரைலரை நாளை வெளியிடுவதாக அறிவித்திருக்கின்றார்.  இந்த திரைப்படம் சமூகத்தில் நடக்கும் ஒரு பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

30 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த விஜய் ரசிகர்கள்…

திரௌபதி,  ருத்ரதாண்டவம் ஆகிய திரைப்படங்கள் சில விமர்சனங்களை சந்தித்தன. அதுபோன்ற சர்ச்சைகள் இந்த படத்திற்கும் கிளம்புமா என்பது படம் வெளியான பிறகே தெரியவரும்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், தற்போது நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். அவரது நடிப்பில் வெளிவந்த சாணி காயிதம், பீஸ்ட், நானே வருவேன் படங்கள் வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் படத்தின் நாயகன் கேரக்டரில் பகாசுரன் படத்தில் செல்வராகவன் நடித்திருக்கிறார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

First published:

Tags: Kollywood