• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இடி முழக்கம் ஜீ.வி.பிரகாஷுக்கு விருது வாங்கித் தரும் - சீனுராமசாமி!

இடி முழக்கம் ஜீ.வி.பிரகாஷுக்கு விருது வாங்கித் தரும் - சீனுராமசாமி!

சீனுராமசாமி

சீனுராமசாமி

இடி முழக்கம் படத்தை ஸ்கை மேன் ஃபிலிம்ஸ் கலைமகன் தயாரிக்க, ரகுநந்தன் இசையமைக்கிறார். இவரது இசையில் மலையாள நடிகர், இயக்குனர், பாடகர் வினீத் சீனிவாசன் ஒரு பாடலை பாடியிருப்பது முக்கியமானது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம் படத்தில் நடித்து வருகிறார் ஜீ.வி.பிரகாஷ். இந்தப் படம் ஜீ.வி.பிரகாஷுக்கு விருது பெற்றுத் தரும் என்று ஆருடம் கூறியுள்ளார் சீனு ராமசாமி.

சீனு ராமசாமி படம் என்றால் கிராமம், கிராமத்து மனிதர்கள், அவர்தம் உணர்வுகளை சொல்பவை  என்பது அனைத்து ரசிகர்களிடமும் தங்கிப் போன சித்திரம். அதை முதல் முதலாக மாற்றுகிறது இடி முழக்கம். இந்தப் படம் கிராமத்துப் பின்னணியில் ஆக்ஷன் படமாக தயாராகிறது. ஜீ.வி.பிரகாஷ், காயத்ரி நடிப்பில் நேற்றுதான் படத்தை தொடங்கியது போல் இருந்தது. இதோ, இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டேன் என்று அறிவித்துள்ளார் சீனு ராமசாமி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அத்துடன், "இடி முழக்கம் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆயத்தங்களுக்கு இடையில் எடுக்கப்பட்ட படத்தின் ஒட்டு மொத்த காட்சிகளும் எடிட்டிங்கில் பார்த்த பிறகு, தம்பி ஜீ.வி.பிரகாஷ் குமாருக்கு நடிப்பிற்காக விருதுகளும் வாழ்த்துகளும் உண்டு" என ட்வீட் செய்துள்ளார்

Also read... விஷால் 31 பெயர், பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிப்பு...!

இடி முழக்கம் படத்தை ஸ்கை மேன் ஃபிலிம்ஸ் கலைமகன் தயாரிக்க, ரகுநந்தன் இசையமைக்கிறார். இவரது இசையில் மலையாள நடிகர், இயக்குனர், பாடகர் வினீத் சீனிவாசன் ஒரு பாடலை பாடியிருப்பது முக்கியமானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: