Home /News /entertainment /

தமிழ் படங்களுக்கு முன்னுரிமை - இயக்குனர் சீனு ராமசாமி கோரிக்கை

தமிழ் படங்களுக்கு முன்னுரிமை - இயக்குனர் சீனு ராமசாமி கோரிக்கை

சீனு ராமசாமி

சீனு ராமசாமி

மாற்றுமொழி டப்பிங், ஆங்கிலப் படங்கள் தனியாக திரையிட கால அட்டவணையை தயாரிப்பாளர்கள் சங்கம் உருவாக்க வேண்டும்' என சீனு ராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ் படங்களுக்கு முதல் முக்கியத்துவம் தர வேண்டும். மாற்று மொழி டப்பிங், ஆங்கிலப் படங்கள் தனியாக திரையிட கால அட்டவணை உருவாக்க வேண்டும் என இயக்குனர் சீனு ராமசாமி தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் பிறமொழிப் படங்களின் ஆதிக்கம் பல ஆண்டுகளாகவே இருக்கிறது. சென்னை போன்ற 'ஏ' சென்டர்களில் தமிழ்ப் படமே திரையிடாமல் தொடர்ச்சியாக ஆங்கில, இந்திப் படங்களை திரையிடுகிற திரையரங்குகள் இருக்கின்றன. பல வருடங்களுக்கு முன்பு இது பிரச்சனையாகி, ஒவ்வொரு திரையரங்கும் வருடத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தினங்கள் தமிழ்ப் படங்களை திரையிட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அவை பேச்சளவில் மட்டுமே கடைபிடிக்கப்பட்டன.

also read : மின்னல் முரளி படம் எப்படி இருக்கு?

தற்போது ஆங்கில, இந்திப் படங்களுடன் தெலுங்கு, கன்னட, மலையாள டப்பிங் படங்களும் தமிழக திரையரங்குகளை ஆக்கிரமித்து வருகின்றன. டிசம்பர் 17 வெளியான புஷ்பா திரைப்படத்துக்கு நேரடித் தமிழ் படமான எனிமியைவிட அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன. ஜனவரி 7 வெளியாகப் போகும் ஆர்ஆர்ஆர் படத்துக்கு ரஜினியின் அண்ணாத்த அளவுக்கு திரையரங்குகள் ஒதுக்கக் கேட்டிருக்கிறார்கள். அதேபோல் ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் படத்துக்கும் அதிக திரைகள் ஒதுக்கப்பட்டன.
வேற்றமொழித் திரைப்படங்களுக்கு ஒதுக்கப்படும் திரையரங்குகளில் பத்து சதவீதம்கூட சின்ன பட்ஜெட் நேரடித் தமிழ்ப் படங்களுக்கு ஒதுக்கப்படுவதில்லை.

also read : கேரளா சேலையில் மிர்ரர் செல்ஃபி பதிவிட்ட அஜித் பட நடிகை..

கன்னட சினிமா இதுபோன்ற நெருக்கடியை எதிர்கொண்ட போது, அங்குள்ள சினிமா சங்கங்கள் பல கட்டுப்பாடுகளை வேற்றுமொழி சினிமாக்களுக்கு விதித்தன. வேற்று மொழிப் படங்கள் வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்தே கர்நாடகாவில் திரையிட வேண்டும் என்பது அதில் ஒன்று. அதுபோன்ற நடவடிக்கையை எடுக்கும்படி இயக்குனர் சீனு ராமசாமி தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

'கேரளா, கர்நாடகா மாநிலத்தில் அவர்கள் படங்கள் வெளியாகும் போது அவர்கள் முன்னுரிமை தருவது போல, தமிழ்நாட்டில் வெளியாகும்போது தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். மாற்றுமொழி டப்பிங், ஆங்கிலப் படங்கள் தனியாக திரையிட கால அட்டவணையை தயாரிப்பாளர்கள் சங்கம் உருவாக்க வேண்டும்' என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சினிமா வர்த்தகம் முழுக்க லாபத்தை மையப்படுத்தி இயங்குவது. திரையரங்குகளிடம் போய் நீ அதை திரையிடக் கூடாது, இதைத்தான் திரையிட வேண்டும் என்று அதிகாரம் செய்ய முடியாது. அவர்கள் ஒத்துக் கொள்ளவும் மாட்டார்கள். போட்டியை சமாளிக்கிற அளவுக்கு தமிழ்ப் படங்கள் தரத்தை உயர்த்திக் கொள்வதே இதற்கு ஒரே தீர்வு.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Tamil movies

அடுத்த செய்தி