Home /News /entertainment /

'மாமனிதன் படத்திற்காக நடிகை காயத்ரிக்கு தேசிய விருது கிடைக்கும்' – இயக்குனர் சீனு ராமசாமி

'மாமனிதன் படத்திற்காக நடிகை காயத்ரிக்கு தேசிய விருது கிடைக்கும்' – இயக்குனர் சீனு ராமசாமி

நடிகை காயத்ரி

நடிகை காயத்ரி

Maamanithan movie : மாமனிதன் படத்தில் 2 குழந்தைகளுக்கு தாய் என்ற கேரக்டரில் கதாநாயகி நடிக்க வேண்டும்.

    மாமனிதன் படத்திற்காக அதில் நடித்துள்ள நடிகை காயத்ரிக்கு தேசிய விருது கிடைக்கும் என்று படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்த திரைப்படத்தை திரைக்கு கொண்டுவர நீண்ட காலமாக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது இந்தப் படம் வரும் 24-ம்தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி, நடிகர்கள் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்டோர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

    Also read... தந்தையர் தினத்தை முன்னிட்டு தனுஷ் வெளியிட்ட ‘திருச்சிற்றம்பலம்’ க்ளிம்ப்ஸ் வீடியோ!

    சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சீனு ராமசாமி தன்னை பாடல் கம்போசிங்கிற்கு இளையராஜா அழைக்கவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

    இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இசையமைக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சீனு ராமசாமி கூறியதாவது-

    மாமனிதன் படத்தில் காயத்ரி மிகச்சிறப்பாக நடித்திருப்பார். இதற்காக அவருக்கு தேசிய விருது கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

    Also read... ஜெயிலர் படத்துக்காக அதிக சம்பளம் பெறும் நடிகர் ரஜினிகாந்த்... எத்தனை கோடிகள் தெரியுமா? 

    மாமனிதன் படத்தில் 2 குழந்தைகளுக்கு தாய் என்ற கேரக்டரில் கதாநாயகி நடிக்க வேண்டும். இதற்காக பல நடிகைகளை அணுகியபோது அவர்கள் நடிக்க மறுத்து விட்டனர். ஆனால் இந்த கேரக்டரின் முக்கியத்துவம் அறிந்து காயத்ரி எங்களுக்கு நடித்துக் கொடுத்துள்ளார்.

    மிகச் சிறந்த குடும்பப் படமாக மாமனிதன் அமையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    அடுத்த செய்தி