Home /News /entertainment /

சிறு பட்ஜெட் படங்களையும் உதயநிதி வெளியிட வேண்டும்… இயக்குனர் சீனு ராமசாமி கோரிக்கை

சிறு பட்ஜெட் படங்களையும் உதயநிதி வெளியிட வேண்டும்… இயக்குனர் சீனு ராமசாமி கோரிக்கை

உதயநிதி ஸ்டாலின் - சீனு ராமசாமி

உதயநிதி ஸ்டாலின் - சீனு ராமசாமி

உதயநிதி நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சிறு பட்ஜெட் படங்களையும் வாங்கி உதயநிதி வெளியிட வேண்டும் என்று இயக்குனர் சீனு ராமசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட விநியோகஸ்தராக நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி உருவெடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான ராதே ஷ்யாம், பீஸ்ட், எதற்கும் துணிந்தவன், டான் உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டது.

அடுத்ததாக ஜூன் 3ம்தேதி வெளிவரவுள்ள விக்ரம் படத்தையும் கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனலுடன் இணைந்து தயாரித்து உதயநிதி வெளியிடுகிறார்.

இந்நிலையில் அவரது நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியில் வரவேற்பை பெற்ற ஆர்ட்டிகிள் 15 படத்தின் ரீமேக் என்றாலும், தமிழ்நாட்டிற்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஏற்ப இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கொடுத்துள்ளார் என திரைத்துறையினர் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க - 13 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய் படத்தில் இணையும் பிரபுதேவா…

 

இந்த படத்தில் உதயநிதியுடன் தான்யா ரவிச்சந்திரன், ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

நெஞ்சுக்கு நீதி படத்தை பாராட்டியுள்ள இயக்குனர் சீனு ராமசாமி, உதயநிதியிடம் கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-

இதையும் படிங்க - 20 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித் படத்தில் இடம்பெறும் மகாநதி சங்கர்

 

கண்ணே கலைமானே படத்தின் சமயத்தில் உதயநிதி அவர்களை மக்கள் அன்பன் என அழைத்தேன் அதை மெய்பிக்கும் விதமாக சிறப்பாக இருந்து நெஞ்சுக்கு நீதி அன்று நான் சொன்னது போல  இதுபோன்ற கதை கருத்தாழமிக்க மக்களிடையே வாழும் படங்களில்  நடித்தால் கலையும் எதிர்கால முற்போக்கு கருத்துலகமும் கைவிடாது.



அது போல வெளிவர முடியாமல் தவிக்கும் கதையம்சம் நிறைந்த சிறுபட்ஜெட் படங்களை வாங்கி ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டால் அதில் உயிராகும் நடிகர்கள் இயக்குனர்கள் புதிய கலைஞர்கள் நன்றியோடு உங்களை என்றும் மறவாது வாழ்த்துவர். இப்பெருமையினை சொல்லி மகிழம் தருணத்தை எதிர்நோக்கி.... வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். உதயநிதி நடிப்பில் வெளிவந்த கண்ணே கலைமானே படத்தை இயக்கியவர் சீனு ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Musthak
First published:

Tags: Udhayanidhi Stalin

அடுத்த செய்தி