ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'தமிழ்மகன்.. தீபாவளியின் வெற்றி நாயகன் ஜி.பி. முத்து' - இயக்குநர் சீனு ராமசாமி பாராட்டு

'தமிழ்மகன்.. தீபாவளியின் வெற்றி நாயகன் ஜி.பி. முத்து' - இயக்குநர் சீனு ராமசாமி பாராட்டு

ஜி.பி. முத்து - சீனு ராமசாமி

ஜி.பி. முத்து - சீனு ராமசாமி

இந்த சீசனில் ஜிபி முத்துவுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு காணப்பட்டது. போட்டியின் முதல் நாளில் இருந்தே முத்து ஸ்கோர் செய்து கொண்டிருந்தார்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மகனுக்காக பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேறிய ஜி.பி.முத்துவை பாராட்டி இயக்குனர் சீனு ராமசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு கவனம் ஈர்த்து வருகிறது.

  பிக்பாஸ் சீசன் 6 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஜி.பி. முத்து, ராபர்ட் மாஸ்டர், அசீம், விக்ரமன், ஆயிஷா உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்றிருந்தனர்.

  இந்த சீசனில் ஜிபி முத்துவுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு காணப்பட்டது. போட்டியின் முதல் நாளில் இருந்தே முத்து ஸ்கோர் செய்து கொண்டிருந்தார். ஜிபி முத்துவுக்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் அதிகரித்தனர்.

  இதேபோன்று அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து புரொமோஷன்கள் வெளியிடப்பட்டு வந்தன. இதனால் இந்த சீசன் ஜிபி முத்துவை நம்பித்தான் உள்ளதோ என்று பிக்பாஸ் ரசிகர்கள் பல்வேறு தளங்களில் கமென்ட் செய்திருந்தனர்.

  கருப்பு வெள்ளையில் அசரடித்த ரைசா வில்சன்! ரீசண்ட் ஹாட் போட்டோஷூட்

  இதற்கிடையே எதிர்பாராத விதமாக ஜிபி முத்துவின் மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதுபற்றிய விபரம் அவருக்கு தெரிவிக்கப்பட்டதும் அவர் உருக்குலைந்து போனார்.

  விபரம் அறிந்து அழ ஆரம்பித்தவர், போட்டியில் இருந்து வெளியேறி மகனைப் பார்க்கும் வரையில் நிறுத்தவில்லை. தனது குழந்தைகளை முத்து சந்தித்து பேசி அவர்களுடன் பிரியாணி சாப்பிட்ட வீடியோ ஒன்று வைரலானது.

  குறுக்கே வந்த ரெட் ஜெயண்ட்.. குழப்பத்தில் இருந்த வாரிசு டீம்... ரிலீசுக்கு முன்பான வியாபாரத்தில் நடந்தது என்ன?

  பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடருமாறு கமல்ஹாசன் கேட்டுக் கொண்டிருந்தார். இருப்பினும் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து முத்து வெளியேறினார். இந்நிலையில் அவரை பாராட்டி இயக்குனர் சீனு ராமாசாமி பதிவிட்டுள்ளார்.

  அவர் தனது பதிவில், வெற்றி பெற தகுதியான ஒரு போட்டியாளன், அதன் வருமானம் வெகுமானம் யாவற்றையும் பணிவோடு வேண்டாமென துறந்து விட்டு தன் மகனுக்காக புகழ் வாய்ந்த சபையில் உலகறிந்த நடிகர் கேட்டும் கேளாமல் #bigbosstamil6 லிருந்து விடைபெற்ற தமிழ்மகன் #GPமுத்து தான் தீபாவளியின் வெற்றி நாயகன் என்று கூறியுள்ளார்.

  இந்த பதிவு கவனம் ஈர்த்து வருகிறது. மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் ஜிபி முத்து செல்வாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: Bigg Boss Tamil 6, Deepavali