திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார்.
தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கி, தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஓர் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளவர் இயக்குநர் சீனு ராமசாமி. தற்போது மாமனிதன், இடிமுழக்கம் என இரு படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றார். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சீனு ராமசாமி, ”என் திரைப்படங்களை பார்த்து நெகிழ்ந்து, மகிழ்ந்து, ரசித்து தொடர்ந்து ஊக்கப்படுத்தி, ஆக்கத்தின் பாதையில் செல்ல உந்துசக்தியாக இருக்கும் தமிழகத்தை ஆளும் 'ஆண் தாய்' மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வெளிவர இருக்கும் 'மாமனிதன்', 'இடிமுழக்கம்' ஆகிய படங்களுக்கு வாழ்த்தும் ஆசியும் பெற்று, என் கவிதை புத்தகத்தையும், அதே சமயம் தமிழகத்தில் நோயும் இயற்கை சீற்றத்துக்கெதிராக அவர் ஆற்றிய போர்க்கால நடவடிக்கைகள்
நினைவாக, நன்றி கூறும் விதமாக நான் நேசித்து படித்த ஜான் ரீடு எழுதிய 'உலகை குலுக்கிய பத்து நாட்கள்' நூலினை அவருக்கு தந்தேன்.
தஞ்சையில் கல்லூரி படிப்பு, 27 வயதில் ராக்கி பாயின் அம்மா - கவனம் ஈர்க்கும் அர்ச்சனா ஜோய்ஸ்!

சீனு ராமசாமி - மு.க.ஸ்டாலின்
அவர்தம் வரலாற்று நூலின் முதல் பாகமான 'உங்களில் ஒருவன்' நூலில் கையொப்பமிட்டு பரிசாக தந்தார். 'மக்கள் அன்பன்' என் கண்ணே கலைமானே திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உடன் இருந்து வாழ்த்தினார்” என்று தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.