Home /News /entertainment /

மாமனிதன் திரைப்படத்தை வாழ வையுங்கள் - முதல்வருக்கு இயக்குநர் கோரிக்கை

மாமனிதன் திரைப்படத்தை வாழ வையுங்கள் - முதல்வருக்கு இயக்குநர் கோரிக்கை

மாமனிதன்

மாமனிதன்

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருக்கும் மாமனிதன் திரைப்படத்தை வார இறுதி நாட்களில் திரையிட உதவுமாறு தமிழக முதல்வரிடம் இயக்குநர் சீனு ராமசாமி கோரிக்கை.

  • News18
  • Last Updated :
மாமனிதன் திரைப்படத்தை வரும் வார இறுதி நாட்களிலும் திரையரங்குகளில் திரையிட உதவ வேண்டுமென தமிழக முதல்வருக்கு இயக்குநர் சீனு ராமசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் மாமனிதன்.  தமிழகத்தில் இந்த திரைப்படம் சுமார் 250 க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

இந்த நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி தமிழக முதல்வருக்கு ட்விட்டர் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார். அதில் மத நல்லிணக்கம் பேசும் மாமனிதன் திரைப்படத்தை வரும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு மட்டும் திரையரங்கில் வாழ வைக்குமாறு மத நல்லிணக்க தந்தை முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை வைக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.  மேலும் நல்லிணக்கத்தை மனதில் சுமக்கும் முதல்வரிடம் கோரிக்கையின் நியாயத்தை சமர்ப்பிக்கிறேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.



மாமனிதன் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இருந்தாலும் படம் பார்த்தவர்கள் திரைப்படம் நன்றாக இருக்கிறது என கூறி வருகின்றனர். இதனால் இந்த வார இறுதியில் ரசிகர்கள் வருகை அதிகம் இருக்கும் என படக்குழு நம்புகிறது.

Also read... ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் நடிகர் சூர்யா தேர்வு

ஆனால் வார நாட்களில் மாமனிதன் திரைப்படத்திற்கு குறைவான ரசிகர்கள் இருந்ததால், வேறு திரைப்படங்களுக்கு திரையரங்குகளை ஒதுக்க திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  இதனால் இயக்குநர் சீனு ராமசாமி தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay Sethupathi

அடுத்த செய்தி