• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Seenu Ramasamy: கிராமத்து படங்கள் போதும்... ரூட்டை மாற்றும் சீனு ராமசாமி!

Seenu Ramasamy: கிராமத்து படங்கள் போதும்... ரூட்டை மாற்றும் சீனு ராமசாமி!

சீனு ராமசாமி - ஜி.வி.பிரகாஷ்

சீனு ராமசாமி - ஜி.வி.பிரகாஷ்

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடிப்பது இதுவே முதல்முறையாகும். அவரே படத்துக்கு இசையமைப்பார் என தெரிகிறது.

  • Share this:
    உணர்வுப்பூர்வமான கிராமத்துப் படங்களை இயக்கி வந்த சீனு ராமசாமி முதல்முறையாக ஆக்ஷன் த்ரில்லர் படமொன்றை இயக்குகிறார்.

    கூடல் நகர் தொடங்கி கடைசியாக இயக்கிய மாமனிதன் வரை சீனு ராமசாமி இயக்கிய படங்கள் அனைத்தும் உணர்வுப்பூர்வமானவை. கிராமத்து எளிய மனிதர்களின் வாழ்வியலை சொல்பவை. அதிலிருந்து முற்றியலும் மாறி ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் ஒரு படத்தை இயக்குகிறார்.

    இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் தயாரிக்கிறார். நாயகனாக ஜீ.வி.பிரகாஷ் நடிக்கிறார். சீனு ராமசாமி இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடிப்பது இதுவே முதல்முறையாகும். அவரே படத்துக்கு இசையமைப்பார் என தெரிகிறது. ஜீ.வி.பிரகாஷ் வசந்தபாலன் இயக்கத்தில் நடித்த ஜெயில் உள்பட பல படங்கள் அவரது நடிப்பில் வெளியாக உள்ளன. இந்நிலையில் சீனு ராமசாமி இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சீனு ராமசாமி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த உதயநிதியின் கண்ணே கலைமானே சரியாகப் போகவில்லை. அதையடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் மாமனிதன் படத்தை இயக்கினார். படம் முடிந்தும் இன்னும் வெளிவராமல் உள்ளது. இந்நிலையில் ஜீ.வி.பிரகாஷை வைத்து புதிய படத்தை அறிவித்திருக்கிறார்.

    ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் சீனு ராமாசாமியின் படத்தைப் பார்க்க ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: